Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி... அடுத்த சீசனுக்கு ரெடியாகும் போட்டியாளர்கள்!

Actor Vijay Sethupathi Host Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் போட்டியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், அதிலிருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இதனையடுத்து பிக் பாஸ் போட்டியை சிம்பு தொகுத்து வழங்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது விஜய் சேதுபதி கன்ஃபார்ம் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Aug 14, 2024 - 03:43
Aug 14, 2024 - 22:44
 0
Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி... அடுத்த சீசனுக்கு ரெடியாகும் போட்டியாளர்கள்!
Actor Vijay Sethupathi Host Bigg Boss Tamil Season 8

Actor Vijay Sethupathi Host Bigg Boss Tamil Season 8 : ஹாலிவுட், பாலிவுட் வழியாக கோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்த பிக் பாஸ், தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிகழ்ச்சி பெரிய அளவில் சூப்பர் ஹிட்டாக முக்கியமான காரணமே உலகநாயகன் கமல்ஹாசன் தான். வார இறுதியில் பிக் பாஸ் போட்டியாளர்களின் பஞ்சாயத்தை தீர்த்து வைப்பதோடு, வாரம் ஒரு புத்தகத்தையும் அறிமுகம் செய்து வைப்பார். அதோடு திரையுலகில் தனக்கு கிடைத்த அனுபவங்களையும் ஷேர் செய்து, நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வார். மேலும் அவ்வப்போது அரசியல் பிரசார மேடையாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்தி வந்தார்.

யார் கண் பட்டதோ தெரியவில்லை..?, கடந்த இரண்டு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விதம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டதும், 7வது சீசனில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதும் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கமல்ஹாசனுக்கு பிக் பாஸில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கள் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கினர். இதனால் கடந்த சீசன் முடியும் போது கமல்ஹாசன் பிக் பாஸில் இருந்து வெளியேறிவிடுவார் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிக் பாஸில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார் கமல்ஹாசன். கமிட்டான படங்களில் நடிக்க நேரம் இல்லாததால், பிக் பாஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கூறியிருந்தார். கமலின் ஓய்வு முடிவு பிக் பாஸ்(Bigg Boss Tamil) ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், புதிய தொகுப்பாளர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் காணப்பட்டது. இதனையடுத்து முதலில் சிம்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே கமலுக்குப் பதிலாக ஒருசில எபிசோட்களை சிம்பு தொகுத்து வழங்கியுள்ளார். அதனால் அவருக்கே வாய்ப்பு அதிகம் என சொல்லப்பட்டது.

மேலும் படிக்க - தனுஷை வம்பிழுத்த சிவகார்த்திகேயன்... மீண்டும் ஈகோ யுத்தம்!

ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, பிக் பாஸ் நிகழ்ச்சியின்(Bigg Boss Tamil Season 8) அடுத்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து(Vijay Sethupathi) வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சரத்குமார், சூர்யா, விஜய் சேதுபதி, சிம்பு, மாதவன் என பல முன்னணி ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதில் விஜய் சேதுபதி தான் செலக்ட் ஆகியுள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகவுள்ளதாகவும், அதற்கான ப்ரோமோ ஷூட்டிங்கும் சீக்கிரம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், போட்டியாளர்களை தேர்வு செய்யும் படலத்தையும் பிக் பாஸ்(Bigg Boss) குழுவினர் தொடங்கிவிட்டார்களாம்.

கமலுக்குப் பதிலாக பிக் பாஸ் அவதாரம்(Vijay Sethupathi Host Bigg Boss) எடுக்கும் விஜய் சேதுபதி, இந்நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்கப் போகிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. அதேபோல், விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என்றும், அப்போது வேறு ஏதேனும் சர்ப்ரைஸ் இருக்கிறதா? என்பது தெரியவரும் எனவும் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow