விளையாட்டு

வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் குறித்த மனு.. ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வெள்ளிப் பதக்கம் கோரிய மனு மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் குறித்த மனு.. ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..
வினேஷ் போகத்தின் மனு மீதான தீர்ப்பை ஆக்ஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி நேற்று [ஆகஸ்ட் 11-ம் தேதி வரை கோலகமாக நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் போட்டியில், சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வந்தனர்.

ஒலிம்பில் போட்டிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பந்தகங்களை வென்று, அதிக பதக்கங்கள் வென்ற நாடாக அமெரிக்கா ஐக்கிய குடியரசு முதலிடத்தை பிடித்தது. உள்ளது. 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கங்களை வென்று சீனா மக்கள் குடியரசு இரண்டவது இடத்தையும், 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என ஜப்பான் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

அதேபோல 18 தங்கம், 19 வெள்ளி, 16 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4ஆவது இடத்தையும், போட்டியை நடத்திய நாடான ஃபிரான்ஸ், 16 தங்கம், 26 வெள்ளி, 22 வெண்கலம் 64 பதக்கங்களுடன் 5ஆவது இடத்தையும் பிடித்தன. மொத்தம் 206 நாடுகள் பங்கேற்ற நிலையில், 84 நாடுகள் பதக்கப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அசத்தலாக விளையாடினார். 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டி முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார். 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கம் கிடைக்கும். தோற்றாலும் வெள்ளி கிடைக்கும் என்ற பதக்க வாய்ப்பு அவருக்கு உருவாகி இருந்தது.

இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்தது.

இறுதிப்போட்டிக்கு முன்பாக 2 கிலோ எடை அதிகரித்து இருந்ததை, அறிந்து கொண்ட வினேஷ் போகத், உணவு உண்ணாமல், இரவு முழுக்க அதிதீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு ஒரே இரவில் 1.9 எடை குறைத்துள்ளார். முடிவில், 100 கிராம் எடையை குறைக்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதோடு, இரவு முழுவதும் உடற்பயிற்சி மேற்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் மனு தொடரப்பட்டது. முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப்போட்டியில் விளையாட தன்னை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அவா் கேட்டிருந்தாா்.

இந்த மனு ஆகஸ்ட் 9ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி, பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், ஒலிம்பிக் போட்டி முடிவதற்குள் தீர்ப்பளிப்பதாக தெரிவித்து இருந்தனர்.

முன்னதாக, ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெறுவதற்கு முன்பே தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதித்தீர்ப்பு வழங்கப்படுவதற்கான கால அவகாசத்தை இன்று வரை [ஆகஸ்டு 13] வரை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் நீட்டித்திருந்தது.

இந்நிலையில், வினேஷ் போகத் மனு மீதான தீர்ப்பை 3ஆவது முறையாக சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனையடுத்து, ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளது.