சந்திர கிரகணம்.. செப்.18ல் வான வேடிக்கையை காண மிஸ் பண்ணாதீங்க - யாரெல்லாம் கவனம்

Lunar Eclipse 2024 Horoscope: இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 18ஆம் தேதி நிகழ உள்ளது. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, கிரகணத்தின் பலன் 12 ராசிகளிலும் தெரியும், எனினும் சில ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

Sep 11, 2024 - 15:42
 0
சந்திர கிரகணம்.. செப்.18ல் வான வேடிக்கையை காண மிஸ் பண்ணாதீங்க - யாரெல்லாம் கவனம்
lunar eclipse 2024 horoscope 18th september

சென்னை:  சந்திர கிரகணம் வரும் 18ஆம் தேதி நிகழப்போகிறது. இந்த சந்திர கிரகணம் பகல் நேரத்தில் நிகழ்வதால் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை. எனினும் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். காரணம் மீன ராசியில் சந்திர கிரகணம் நிகழும் நாளில் கன்னி ராசியில் சூரியன் கேது கூட்டணி அமைந்துள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் யாருக்கெல்லாம் பாதிப்பு வரப்போகிறது என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். 

சந்திர கிரகணம்: 

மீன ராசியில் வரும் 18ஆம் தேதி காலையில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் நிகழும் போது கன்னி ராசியில்  கேது, சூரியன் கிரகங்களின் கூட்டணி அமைந்துள்ளது. இந்த கிரகங்கள் சேர்க்கை, பார்வையால்  மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்:

சந்திர கிரகணம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் நிகழ்கிறது. இந்த நாளில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களுக்கு மேன்மையும் யோகமும் கிடைக்கும். சந்திர கிரகண நாளில் சந்திரன் காயத்ரி மந்திரம் கூறி பிரார்த்தனை செய்ய நினைத்த காரியம் நிறைவேறும். 

ரிஷபம்:

சந்திர கிரகணம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் நிகழப்போகிறது. பண வருமானம் அதிகரித்தாலும் விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். இந்த நாளில் குழந்தைகளில் உடல்நலனில் அக்கறை தேவை.  வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். வெளி உணவுகளை சாப்பிட வேண்டாம்.  பிரச்சினைகள் தீர கணபதியை வணங்கவும். கிரகண தோஷம் நீங்குவதற்கு கந்த சஷ்டி கவசம் படிக்கவும். காலையிலேயே குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவது நன்மையை ஏற்படுத்தும். 

மிதுனம்: 

சந்திர கிரகணம் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் நிகழப்போகிறது. கிரகண தோஷம் இல்லை என்றாலும்  தொழில் ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்வதால் வேலையில் கவனமும் நிதானமும் தேவைப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கிரகண நாளில் மன குழப்பம் நீங்க துர்க்கா அஷ்டோத்திரம் படிப்பது மன தைரியத்தை அதிகரிக்கும். 

கடகம்: 

சந்திர கிரகணம் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் நிகழ்கிறது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பணம் பல வழிகளிலும் கொட்டும்.  சந்திர கிரகண நாளில்  வருமானம் அதிகரித்து பாக்கெட்டில் பணம் நிறைய மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள். குல தெய்வ வழிபாடு மன நிம்மதியை அதிகரிக்கும். 

சிம்மம்:

சந்திரக கிரகணம் 8வது வீட்டில் நிகழ்கிறது. அஷ்டமத்தில் கிரகணம் நிகழும் நாளில் சந்திராஷ்டமும் உள்ளதால் மிக முக்கியமான முடிவுகளை அன்றைய தினம் எடுக்க வேண்டாம். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரிடமும் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம். பங்குச்சந்தை முதலீடுகளில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதீர்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். 

கன்னி:

உங்கள் ராசிக்கு நேர் எதிரே கிரகங்கள் இணைந்துள்ளன சந்திர கிரகணம் ஏழாம் வீட்டில் நிகழப்போவதால் கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். கணவன் மனைவி சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கர்ப்பிணி பெண்கள் கிரகண நாளில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. கிரகண நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது.

துலாம்: 

உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் கிரகணம் நிகழப்போவதால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீண் செலவுகள் ஏற்படும் கவனமாக இருக்கவும். காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. பணி செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு செய்யுங்கள் 

விருச்சிகம்: 

பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம்  வீட்டில் சந்திர கிரகணம் நிகழப்போவதால் கவனமும் நிதானமும் தேவை. எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் துறைகளில் பணி செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும்.  பேசும் பேச்சில் நிதானம் தேவை கோபத்தை கட்டுப்படுத்தவும்.

தனுசு:

உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சந்திர கிரகணமும் நிகழப்போகிறது.அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அலுவலகத்தில் உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது.  அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கிரகண நாளில் ஆலய வழிபாடு மன அமைதியை தரும். 

மகரம்: 

உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சந்திர கிரகணம் நிகழப்போகிறது. புது முயற்சிகளில் கவனம் தேவை. இந்த நாளில் புது வேலைக்காக முயற்சி செய்ய வேண்டாம்.  ஆன்மீக பயணம் செல்வது நல்லது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சந்திர கிரகண நாளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம்.

கும்பம்:

இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் மீதே கோபப்பட்டு சண்டைக்கு செல்வீர்கள்.  காலையிலேயே சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். அன்னாபிஷேகத்திற்கு பச்சரிசி வாங்கிக்கொடுப்பது நல்லது. துர்கா அஷ்டோத்திர பாராயணம் செய்வது மனதிற்கு அமைதியை தரும். வண்டி வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும்.

மீனம்:   

உங்களுடைய ராசியில் கிரகணம் நிகழ உள்ளதால் அந்த நாளில் உணவு விசயத்தில் கவனம் தேவை. இந்த நாளில் நீங்கள் உச்சரிக்கும் மந்திரம் உங்களுக்கு பல மடங்கு பலனை அளிக்கும். நினைத்த காரியம் நிறைவேற இந்த நாளில் குல தெய்வத்தை வணங்குங்கள் பாதிப்புகள் குறையும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow