பிணியை விரட்டும் காயத்ரி மந்திரமும்... அதன் பின்னால் உள்ள அறிவியலும்...
மந்திரங்களிலேயே முதன்மையான மற்றும் முக்கியமான மந்திரமாகக் காயத்ரி மந்திரம் கருதப்படுகிறது. காயத்ரி ஜெயந்தி மற்றும் ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் எதற்காக காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கிறார்கள் என்பது குறித்து கீழே பார்க்கலாம்.
காயத்ரி தேவி அவதரித்த தினத்தையே காயத்ரி ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. அனைத்து வேதங்களின் தாயாகவும் சரஸ்வதி, பார்வதி, லட்சுமி ஆகிய அனைத்து தேவியர்களின் வடிவமாகவும் காயத்ரி தேவி திகழ்கிறார். வேத மாதா என போற்றப்படும் காயத்ரி தேவி, ஞானம், ஆன்மிக வளர்ச்சி, அறிவாற்றன் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறார். மந்திரங்களிலேயே முதன்மையான மற்றும் முக்கியமான மந்திரமாகப் போற்றப்படும் காயத்ரி மந்திரத்தை தினமும் ஜெபித்து வந்தால் வாழ்வின் துன்பங்கள் நீங்கி நல்ல வழி பிறக்கும் என்பது ஐதீகம்.
காயத்ரி மந்திரத்தின் பலன்கள்:
காயத்ரி மந்திரம் என்பது சூரிய பகவானுக்கும், காயத்ரி மாதாவிற்கும் உரிய மந்திரமாகும். காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வருபவர்களுக்கு அனைத்து பாவங்கள், துன்பங்கள், தடைகள் ஆகியவற்றில் இருந்த விடுபடுவார்கள். காயத்ரி ஜபத்தன்று கோயிலுக்கு சென்று வழிபடுவது, புனித நீராடுவது, காயத்ரி மந்திரம் ஜெபிப்பது அளவில்லாத புண்ணிய பலன்களை பெற்றுத் தரும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு பின்னால் இருக்கும் அறிவியல்:
*காயத்ரி மந்திரம் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை சுத்தம் செய்கிறது. மனத்தெளிவையும், மன அமைதியையும் தருகிறது.
*தன்னையும், வெளி உலகையும் உணரும் ஞானத்தை தருகிறது.
* உண்மையான பக்தி மற்றும் அர்ப்பணிப்புடன் ஜெபிப்பவர்களின் மனதை காயத்ரி மந்திரம் தூய்மை ஆக்குகிறது.
* மிக புனிதமான மந்திரமாக கருதப்படும் காயத்ரி மந்திரம், அனைத்து பிரச்சனைகளிலும் இருந்தும் விடுபட உதவுகிறது.
- காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கும்போது மனம் அமைதி அடையும். இதை உச்சரிக்கும்போது உதடுகள், மூக்கு, தொண்டை ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் அதிர்வலைகள் உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களின் சுரப்பை தூண்டுகிறதாகக் கூறப்படுகிறது.
நோய்களை விரட்டும் காயத்ரி மந்திரம்:
* கற்றல் திறன், மனம் ஒருநிலைப்படுதல் ஆகிய ஆற்றல்களை காயத்ரி மந்திரம் அதிகரிக்க செய்கிறது.
* இது உடலில் உள்ள சக்கரங்களை சீராக இயங்க வைக்கிறது மற்றும் மனம் ஒருநிலைப்படுவதை அதிகரிக்கிறது.
* கவலை, மனஅழுத்தம் ஆகியவற்றை போக்குகிறது. இது இன்றைய இயந்திர உலகிற்கு மிக அவசியமான ஒன்றாகும்.
* உடலில் உள்ள செல்களை தூண்டி, மனத்தை தெளிவாக செயல்பட வைக்கிறது. எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்கிறது.
* காயத்ரி மந்திரம் ஜெபிப்பதற்கு முன் பிரணாயாமம் செய்ய வேண்டும் என சொல்வார்கள். இது சுவாசத்தை கட்டுப்படுத்தி, நுரையீரலில் செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. மூச்சை நன்கு உள்ளிழுத்து, வெளிவிடுவதால் சுவாச பிரச்சனைகள் குணமடைகிறது.
* காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் இது எதிர்மறை ஆற்றல்களை நீக்குகிறது. ஆராவை சுத்தப்படுத்தி நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க செய்கிறது.
What's Your Reaction?