Chennai Police : ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ.. நேரில் பாராட்டி வெகுமதி வழங்கிய சென்னை போலீஸ் கமிஷனர்!

Chennai Police Commissioner Arun Praised SI Kalaichelvi : சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கலைச்செல்வியை இன்று காலை நேரில் வரவழைத்த போலீஸ் கமிஷனர் அருண், கலைச்செல்வியின் துணிச்சலை மனம் திறந்து பாராட்டியதுடன், அவருக்கு வெகுமதி வழங்கியும் கெளரவித்துள்ளார்.

Aug 13, 2024 - 19:15
Aug 13, 2024 - 19:46
 0
Chennai Police : ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ.. நேரில் பாராட்டி வெகுமதி வழங்கிய சென்னை போலீஸ் கமிஷனர்!
Chennai Police Commissioner Arun Praised SI Kalaichelvi

Chennai Police Commissioner Arun Praised SI Kalaichelvi : சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரோகித் (எ) ரோகித் ராஜ். பிரபல ரவுடியான இவர் மீது பிரபல ரவுடிகள் சிவகுமார், தீச்சட்டி முருகன், ஆறுமுகம் ஆகியோரை கொலை செய்த வழக்கு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த 3 வழக்குகளிலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த ரவுடி ரோகித் ராஜிற்கு(Rowdy Rohit Raj) நீதிமன்றம் மூன்று முறை பிடிவாரண்டு கொடுத்துள்ளது. ஆனால் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதற்கிடையே அவர்  கீழ்ப்பாக்கம் பழைய கல்லறை பகுதியில் பதுங்கிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து டி.பி சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைச்செல்வி(SI Kalaichelvi) தலைமையிலான தனிப்படை போலீசார், அங்கு சென்று ரோஹித் ராஜை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் அருகில் இருந்த பீர்பாட்டிலை உடைத்து தலைமைக்காவலர்கள் சரவணக்குமார், பிரதீப் ஆகிய இருவரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். உடனே உதவி ஆய்வாளர் கலைச்செல்வி எச்சரிக்கை செய்து பிடிக்க முற்பட்ட போது, அவரையும் தாக்க முயன்றுள்ளார்.

இதனால் கலைச்செல்வி, தற்காப்பிற்காக துப்பாக்கியால் ரோகித் ராஜின் கால் முட்டியின் கீழ் சுட்டு பிடித்துள்ளார். இதில் காயம் அடைந்த ரோகித் ராஜ் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதேபோல் காயம் அடைந்த தலைமைக்காவலர்கள் சரவணக்குமார், பிரதீப் ஆகியோரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் இன்று அதிகாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், துணிச்சலுடன் செயல்பட்டு ரவுடியை துப்பாக்கியால் சுட்ட  உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார்.

அதாவது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கலைச்செல்வியை இன்று காலை நேரில் வரவழைத்த போலீஸ் கமிஷனர் அருண், கலைச்செல்வியின் துணிச்சலை மனம் திறந்து பாராட்டியதுடன், அவருக்கு வெகுமதி வழங்கியும் கெளரவித்துள்ளார். உதவி ஆய்வாளர் கலைச்செல்வியின் துணிச்சலை பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு, தமிழ்நாடு காவல் துறையினர் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மாதம் 11ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப் பகுதியில், திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்பவரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். 

சென்னை போலீஸ் கமிஷனர் அருண், பதவியேற்றவுடன் 'ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பதில் அளிக்கப்படும்' என்று கூறியிருந்தார். தற்போது அவர் கூறியதை தமிழ்நாடு காவல் துறையினர் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow