Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 11 - பானு சப்தமி பதவி யோகம் யாருக்கு?

Today Horoscope Predictions in Tamil: சூரிய பகவானின் அருள் நிறைந்த ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம் சந்திரன் துலாம் ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Aug 11, 2024 - 07:23
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 11 - பானு சப்தமி பதவி யோகம் யாருக்கு?
today Rasi Palan


Today Horoscope Predictions in Tamil:நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆடி மாதம் 26ஆம் நாள் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று சப்தமி திதி, நாள் முழுவதும் சுவாதி நட்சத்திரம்.  பானு சப்தமி தினமான இன்று  மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் பதவி யோகம் யாருக்கு தேடி வரும் என்று பார்க்கலாம். 

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரன் பார்வை உங்களுடைய  ராசிக்கு நேரடியாகக் கிடைக்கிறது. வீட்டில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்களின் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகரிக்கும்.  அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும் வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். 

ரிஷபம்

சந்திரன் இன்றைக்கு உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடன் பிரச்சினைகள் தீரும். உங்களுடைய குடும்பத்தில் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். சகோதர சகோதரிகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரும். எதிர்பாராத பணவரவினால் வங்கி சேமிப்பு உயரும். இரவு நேரங்களில் காரமான உணவுகளை தவிர்க்கவும். 

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுக்கள். சுப காரிய முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்கள் இன்று விண்ணப்பம் செய்யலாம். 

கடகம்

சந்திரன் இன்றைக்கு உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வேலையில் கவனமுடன் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வருமானத்தில் முன்னேற்றம் வரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்க குடும்பத்தில் வரவுக்கு ஏற்ப செலவுகள் வரும். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். 

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும்.  திடீர் வெளியூர் பயணம் செல்வீர்கள் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். பண பற்றாக்குறை நீங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு உயர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். 

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். பணவருமானம் நன்றாக இருக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். 

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பணவருமானம்  வந்தாலும் விரைய செலவுகளும் வரும். சிக்கனமாக இருந்தால் செலவுகளை சமாளிக்க முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். 

தனுசு

சந்திரன் இன்றைய தினம்  உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் வரும். வீண் செலவுகள் செய்யாமல் பணத்தை பத்திரப்படுத்துங்கள். 

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் வரும். நினைத்த காரியம் நிறைவேறும். புதிய சொத்துக்கள் வாங்க இன்றைக்கு பேசலாம் பேச்சுவார்த்தைகள் வெற்றியில் முடியும்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் நீங்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நினைத்த காரியம் நிறைவேறும். பணம் விசயமாக வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி ஏற்படும். காரியத்தடைகள் நீங்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். 

மீனம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். வீட்டில் பேசும் போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் பேசுவது நல்லது. அடுத்தவர் விசயங்களில் தலையிட வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் கடன் வாங்கி தர வேண்டாம். உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow