Pune Family Visit Tirupati : கொத்து கொத்தாக கழுத்தில் நகை.. திருமலையில் உலா வந்த குடும்பம்.. ஏழுமலையானுக்கே போட்டியா?

Pune Family Visit Tirupati : திருமலை ஏழுமலையான் கோயிலில் கழுத்து நிறைய தங்க நகையுடன் உலா வந்த புனே தொழிலதிபர் குடும்பத்தினரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொத்து கொத்தாக நகை அணிந்து வந்தவர்களை ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

Aug 23, 2024 - 17:10
Aug 24, 2024 - 10:02
 0
Pune Family Visit Tirupati : கொத்து கொத்தாக கழுத்தில் நகை.. திருமலையில் உலா வந்த குடும்பம்.. ஏழுமலையானுக்கே போட்டியா?
tirumala tirupati gold family

Pune Family Visit Tirupati : திருமலைக்கு வந்த பக்தர்கள் பலரும் மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். மிகப்பெரிய பணக்கார கடவுள் ஏழுமலையான். அவருக்கு பல லட்சம் கோடி சொத்துக்கள் உள்ளன. பிரம்மோற்சவ நாட்களில் மலையப்பசுவாமி தங்கம், வைர நகைகளை அணிந்து நான்கு மாட வீதிகளில் உலா வருவார். அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் தங்கம் உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

அந்த ஆண்கள் இருவரும் தங்களது கழுத்து நிறைய சரம் சரமாக தங்கச் சங்கிலிகளை அணிந்திருந்தனர். கழுத்து மட்டுமின்றி, கைகளிலும் அந்த ஆண்கள் இருவரும் நகை அணிந்திருந்தனர். உடன் வந்திருந்த பெண்ணும் தங்க ஆபரண நகைகளை அணிந்திருந்தார். இவர்களை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சன்னி நானாசாகேப் வாக்சவுரே. இவர் பாலிவுட் பட தயாரிப்பாளர்கள் பலருக்கு பண உதவிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. தங்க நகை அணிவதில் ஆர்வம் காட்டும் இவர் அவ்வப்போது இணையத்தில் வைரலாவதையும் வழக்கமாக கொண்டவராக இருக்கிறார்.
இந்த நிலையில், தொழிலதிபர் சன்னி நானாசாகேப் வக்சவுரே அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் வந்து விஐபி சிறப்பு பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார்.

ஏழுமலையானை தரிசனம் செய்த பிறகு  சன்னி நானாசாகேப் மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 25 கிலோ தங்க நகைகளை அணிந்தவாறு கோயில் வளாகத்தில் வலம் வந்தனர். அப்போது, கோயிலுக்கு வந்த பலரும் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நிலையில் அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவுக்கு கீழே இந்த குடும்பம் திருப்பதி ஏழுமலையானுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நகை அணிந்துள்ளனர் என்று நடமாடும் நகைக்கடை குடும்பம் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow