Makkal Needhi Maiam : இரண்டே பெண் பிரதிநிதிகள்... இதுதான் கமலின் சமத்துவமா? – நெட்டிசன்கள் சாடல்!

Kamal Haasan Makkal Needhi Maiam Party : மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த இரண்டு குழுக்களிலும் வெறும் இரண்டே பெண் பிரதிநிதிகள் மட்டும் உள்ளதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

Aug 23, 2024 - 17:06
Aug 24, 2024 - 10:03
 0
Makkal Needhi Maiam : இரண்டே பெண் பிரதிநிதிகள்... இதுதான் கமலின் சமத்துவமா? – நெட்டிசன்கள் சாடல்!

Kamal Haasan Makkal Needhi Maiam Party : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை உருவாக்கி, அதன் கொடி மற்றும் பாடலை நேற்று (ஆக.22) வெளியிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து இதுவரை அமைதி காத்திருந்த கமல்ஹாசன், தனது மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டத்தை அவசர அவசரமாக கூட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவருவது உட்பட மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்த நிலையில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் புகைப்படம் வெளியாகி விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 

சமுத்துவம், சமூகநீதி குறித்து ஏறும் மேடைகள், திரைப்படங்கள், அரசியல் மாநாடுகள் மற்றும் பிரசாரங்களில் பேசும் கமல்ஹாசன், தனது கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பெண்களுக்கு முக்கியதுவம் கொடுக்காதது ஏன்? பெண்கள் அதற்கு தகுதியற்றவர்களா? பெண் கட்சி உறுப்பினர்கள் இல்லையா, இல்லை அவர்களை ஓரங்கட்டுகிறார்களா? மக்கள் நீதி மய்யத்தில் ஆணாதிக்கம் தலைத்தோங்குகிறதா? என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர். 

ஏற்கனவே திமுகவில் ஒரேயொரு பெண் மாவட்டச் செயலாளர் உள்ளதே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யமும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. திமுக கூட்டணி மட்டுமல்ல அதிமுக போன்ற எதிர்க்கட்சிகளும் பெண்களுக்கான முக்கியத்துவத்தை கொடுக்காமல் இருப்பதாகவும், பிறகு எதற்காக இவர்களெல்லாம் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு குறித்து பேசுகிறார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow