Kallar Reclamation Schools : நீதியரசர் சந்துரு அறிக்கையினை புறக்கணிக்கிறதா தமிழக அரசு?.. அறிக்கையினை ஏற்பதில் தயக்கம்

Kallar Reclamation Schools : உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் நடக்கும் சாதிய மோதல்களை தடுக்க ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழக அரசு அமைத்தது.

Aug 23, 2024 - 17:41
Aug 24, 2024 - 10:02
 0
Kallar Reclamation Schools : நீதியரசர் சந்துரு அறிக்கையினை புறக்கணிக்கிறதா தமிழக அரசு?.. அறிக்கையினை ஏற்பதில் தயக்கம்
justice chandru report

Kallar Reclamation Schools : கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது. நீதிபதி சந்துரு அவர்களின் பரிந்துரைக்கு மாறாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளது சந்துருவின் அறிக்கையில் முதல் பக்கத்தில் முதல் இடத்தில் இடம் பெற்றிருந்த பரிந்துரையை தமிழக அரசு நிராகரித்துள்ளது இதனால் நீதிபதி சந்துருவின் அறிக்கையை தமிழக அரசு இனி செயல்படுத்துமா பரிந்துரைகளை ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சமூகநீதியை நிலைநாட்டுவதில் பெரும் அக்கறை கொண்டுள்ள திராவிட மாடல் அரசு நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் 299 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் வழங்கி வருகிறது.

மேலும், திறன்மிகு வகுப்பறைகள், இலவச மருத்துவப் பரிசோதனைகள், ஆங்கில வழிக்கல்வி போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இப்பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறானதாகும்.

இப்பள்ளிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தனித்துவத்தோடு இயங்கி வரும் சூழ்நிலையில், அவற்றை மேலும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

எனவே, இப்பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானதும் மற்றும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் நடக்கும் சாதிய மோதல்களை தடுக்க ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழக அரசு அமைத்தது. ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு கடந்த ஜூன் 18ஆம் தேதி தமிழக அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில் தற்போது நீதிபதி சந்துரு அவர்களின் பரிந்துரைக்கு மாறாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளது சந்துருவின் அறிக்கையில் முதல் பக்கத்தில் முதல் இடத்தில் இடம் பெற்றிருந்த பரிந்துரையை தமிழக அரசு நிராகரித்துள்ளது இதனால் நீதிபதி சந்துருவின் அறிக்கையை தமிழக அரசு இனி செயல்படுத்துமா பரிந்துரைகளை ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


கள்ளர் மறுசீரமைப்பு பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிட பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் முடிவு ஏதும் அரசிடம் இல்லை என இன்று அரசு அறிவித்துள்ளது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow