Special Buses : கிருஷ்ண ஜெயந்திக்கு ஊருக்கு போறீங்களா?.. 985 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

Krishna Jayanti 2024 Special Buses : சென்னை, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் 70 பேருந்துகளும், இதே தேதிகளில் மாதவரத்தில் இருந்து மேற்கூறிய இடங்களுக்கு 20 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 23, 2024 - 07:44
Aug 24, 2024 - 10:05
 0
Special Buses : கிருஷ்ண ஜெயந்திக்கு ஊருக்கு போறீங்களா?.. 985 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!
Krishna Jayanti 2024 Special Buses

Krishna Jayanti 2024 Special Buses : கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதிதாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. பயணிகளின் வசதிக்காக வாரம்தோறும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமைகளிலும், பண்டிகை நடிகைகளிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

ஆகஸ்ட் 26ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னதாக 24ம் தேதி நாளை (சனிக்கிழமை), 25ம் தேதி நாளை மறுநாள் (ஞாயிறுக்கிழமை) என தொடர் விடுமுறை வருவதால் இன்று முதல் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்வார்கள். இதனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், ''ஆக.24, 25 வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு), ஆக.26 கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை வருவதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆக.23, 24 தேதிகளில் 485 பேருந்துகள், ஆக.25, 26 (கிருஷ்ண ஜெயந்தி) தேதிகளில் திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

சென்னை, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆக.23, 24 தேதிகளில் 70 பேருந்துகளும், இதே தேதிகளில் மாதவரத்தில் இருந்து மேற்கூறிய இடங்களுக்கு 20 பேருந்துகளும் இயக்கப்படும். மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 350 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 985 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதி நாட்களில் பயணிக்க சுமார் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். அதே நேரம், திங்களன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்கு அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள்: இது ஒரு புறமிருக்க, வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு 1050 சிறப்பு பேருந்துகள் ஆக.27 முதல் செப்.10ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow