Fixed Deposit: 9%க்கும் அதிகம் வட்டி வழங்கும் வங்கிகள்! வருமானத்திற்கு சிறந்த வழி!

Fixed Deposit Interest Rate in Bank : நிலையான வைப்பு மூலம் சேமிப்பை வலுப்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்கள் எப்படி அதிகம் லாபம் பெறலாம் மற்றும் எந்தெந்த வங்கிகளில் அதிக வட்டி வழங்கப்படுகிறது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

Jul 29, 2024 - 21:41
Jul 30, 2024 - 15:39
 0
Fixed Deposit: 9%க்கும் அதிகம் வட்டி வழங்கும் வங்கிகள்! வருமானத்திற்கு சிறந்த வழி!
அதிகம் வட்டி வழங்கும் வங்கிகள்

Fixed Deposit Interest Rate in Bank : தற்போதைய தலைமுறையினரிடையே பணத்தை எப்படி சேமிப்பது, எங்கு முதலீடு செய்வது குறித்த சந்தேகங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. சேமிப்பின் அவசியம் குறித்து அறிந்தவர்கள் வங்கிகளால் வழங்கப்படும் பல திட்டங்களில் தங்களது பணத்தை முதலீடு செய்து, நிலையான வருமானத்திற்கு வழிவகை செய்கின்றனர். சேமிப்பு என்று எடுத்துக்கொண்டாலே Fixed Deposit (நிலையான கணக்கு) திட்டமே மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

முதலில் Fixed Deposit என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம். 

நிலையான வருமானம், பாதுகாப்பு, தனித்தன்மையை விரும்புபவர்கள் Fixed Deposit திட்டத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். சுருக்கமாக சொல்லப்போனால், ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்கு ஒரு குறிப்பிட்ட வட்டி கிடைப்பதுதான் Fixed Deposit. இதில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் உங்களது நிதிக்கு பாதுகாப்பு மட்டுமில்லாமல் வளர்ச்சியும் இருக்கும். நீங்கள் முதலீடு செய்யும் உங்களது பணத்துக்கான கால வரம்பு வரை ஒரு நிலையான வட்டி மாதந்தோரும் உங்களிடத்தில் வந்து சேரும். பெரும்பாலான வங்கிகளில், கால வரம்பு முடியும் வரை, வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் HDFC போன்ற ஒரு சில தனியார் வங்கிகளில், வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும். இது Floating Rate என்று கூறப்படுகிறது. இந்த வட்டி விகித மாற்றங்கள் குறித்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை அந்தந்த வங்கிகள் அறிவிப்புகளை வெளியிடும். 

Fixed Deposit கணக்கில் பணத்தை முதலீடு செய்ய விரும்புபவர்கள், குறைந்தபட்சம் ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம். வங்கிகளை பொருத்து முதலீடுகளில் மாற்றம் இருக்கலாம். இத்திட்டத்திற்கான கால வரம்பு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கலாம். உங்களது தேவைக்கேற்ப இதனை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். காலவரம்பைப் பொருத்தும் உங்களது முதலீட்டை பொருத்தும் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படும். 

Fixed Deposit கணக்கில் இரண்டு வழிகளில் நீங்கள் முதலீடு செய்யலாம். அதில் ஒன்று வங்கிகளில் முதலீடு செய்வது, மற்றொன்று நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது. நீங்கள் வங்கிகளில் செய்யும் முதலீடுகள் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI)-ன் கட்டுப்பாட்டில் வரும். இதனால் உங்களது நிதிக்கு எந்த பாதுகாப்பின்மையும் ஏற்படாது. அதுவே நிதி நிறுவனங்களில் செய்யும் முதலீடுகள் RBI-ன் கட்டுப்பாட்டில் கீழ் வராது. 

9%-க்கும் அதிகமாக வட்டி வழங்கும் வங்கிகள்:

இந்த நிலையில், Fixed Deposit மூலம் சேமிப்பை பலப்படுத்த நினைக்கும் முதலீட்டாளர்களுக்காகவே SBI, PNB, BoI, HDFC Bank, ICICI Bank, Axis Bank உள்ளிட்ட 40 வங்கிகளில் 9%-க்கும் அதிகமான வட்டி வழங்கப்படுகிறது. அவற்றில் உங்களின் தேவைக்கு ஏற்ற வங்கியை தேர்வு செய்து உறுதியான நிலையான வருமானத்திற்கு வழிவகுங்கள்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow