தமிழ்நாடு

1 லட்சம் ரூபாயை நெருக்கும் தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது.

1 லட்சம் ரூபாயை நெருக்கும் தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
Gold Rate
வாரத்தின் முதல் நாளான இன்று (டிசம்பர் 15) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து, சவரன் ரூ.99,680 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. விரைவில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொடும் என்பதால் நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.

இன்றைய விலை நிலவரம்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.99,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,460-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடரும் உச்சத்தின் பின்னணி

கடந்த அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600-க்கு விற்கப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது. டிசம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இம்மாத தொடக்கத்தில் ரூ.96 ஆயிரத்தையும் தாண்டி விற்பனையானது.

தொடர்ச்சியாக ரூ.96 ஆயிரத்துக்குக் கீழ் குறையாமல் விற்பனையான தங்கம், கடந்த 12-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.98,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், இன்று மீண்டும் அபரிமிதமான ஏற்றத்தைக் கண்டு, வரலாறு காணாத உச்சத்தை நெருங்கியுள்ளது.

வெள்ளி விலையின் ஏற்றம்

தங்கத்துக்கு இணையாக வெள்ளி விலையும் போட்டிப் போட்டு அதிகரித்து வருகிறது. அதன்படி, இன்று வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ.3 மற்றும் கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிராம் வெள்ளி ரூ.213-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.