அம்மா வீட்டில் இருந்து மறந்து கூட இதை கொண்டு வராதீர்கள்.. பிரச்சினை வீடு தேடி வரும் - ஆன்மீக டிப்ஸ்

திருமணமான வீட்டில் இருந்து அம்மா வீட்டிற்கு செல்லும் பெண்கள் புளி மற்றும் உப்பு சேர்த்து செய்யும் ஊறுகாயை எடுத்துக் கொண்டு வரக்கூடாது. இதனை இலவசமாகவோ அல்லது பணம் கொடுத்தோ வாங்கிக் கொண்டு வரக்கூடாது என சாஸ்திரம் சொல்கிறது.

Sep 3, 2024 - 17:09
Sep 4, 2024 - 10:09
 0
அம்மா வீட்டில் இருந்து மறந்து கூட இதை கொண்டு வராதீர்கள்.. பிரச்சினை வீடு தேடி வரும் - ஆன்மீக டிப்ஸ்
spirituality tips

பிறந்த வீட்டில் விருந்துக்கு வந்து விட்டு கணவர் வீட்டிற்கு திரும்ப செல்லும் பெண்கள் சில பொருட்களை கொண்டு செல்வார்கள். உரிமையோடு கொண்டு செல்லும் சில பொருட்கள் உறவுக்கே சிக்கலை ஏற்படுத்தி விடும். திருமணமான பெண்கள் அம்மாவின் வீட்டில் இருந்து என்ன பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் என்ன பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்று பார்க்கலாம்.

பிறந்த வீட்டில் செல்லப்பிள்ளைகளாக இருக்கும் பெண்கள் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்ற பின்னர் விசேஷங்களுக்கு விருந்தினர்களாக வந்து செல்வார்கள். அப்போது நம்முடைய அம்மா வீடுதானே என்று சில பொருட்களை கொண்டு செல்வார்கள்.நாம் என்ன பொருட்களை கொண்டு செல்லலாம் 
என்ன பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்று பார்க்கலாம். 

கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம். அதனை நாம் காசு கொடுத்துதான் வாங்க வேண்டும். அம்மா வீட்டில் அதிகமாக கல் உப்பு இருக்கிறதே என்று நாம் எடுத்துக்கொண்டு போகக் கூடாது. இதனால் அம்மா வீட்டின் செல்வம் வெளியே சென்று விடுமாம். அதே போல புளி, மிளகாயை அம்மா வீட்டில் இருந்து கொண்டு செல்லக்கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

அம்மா வீட்டின் பூஜை அறையில் வைத்துள்ள பொருட்களை நாம் எடுத்துக்கொண்டு போகக் கூடாது. அம்மாவிடம் இருந்து பரிசாக புதிய பூஜை பொருட்களை வாங்கிக்கொண்டு செல்லலாம்.அம்மாவின் வீட்டில் வாங்கி வைத்திருப்பதை கொண்டு செல்லக்கூடாது. 

பொதுவாக அம்மா வீட்டில் செய்யும் ஊறுகாய் ருசியாக இருக்கும் என்று பிறந்த வீட்டில் இருந்து எடுத்துக்கொண்டு செல்வார்கள். ஒருபோதும் ஊறுகாயை பிறந்த வீட்டில்  இருந்து கொண்டு போகக்கூடாது.இது பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் சண்டையை ஏற்படுத்திவிடும். 

நல்லெண்ணெய் கடையில் வாங்கிக் கொண்டுதான் வீட்டிற்கு செல்ல வேண்டும். அம்மா வீட்டில் இருந்து நல்லெண்ணெய் கொண்டு செல்லக்கூடாது.நம்முடைய வீட்டில் இருந்தும் நல்லெண்ணெய் கொடுத்து விடக்கூடாது. சிறிய பிரச்சினை இருந்தாலும் அது பெரிய பிரச்சினையாக மாற்றி விடும்.

அம்மா வீட்டில் தோட்டத்தில் விளைந்த கசப்பான காய்கறிகளை கொண்டு போகக் கூடாது.சுண்டக்காய், பாகற்காய் போன்றவைகளை கொண்டு செல்லக்கூடாது. குடும்பத்திற்கு இடையே உறவில் கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே போல செடி, கொடி வகைகளையும் பிறந்த வீட்டில் இருந்து கொண்டு செல்லக்கூடாது. 

அம்மாவின் வீட்டில் இருந்து அரிசி அளக்கப் பயன்படுத்தப்படும் உழக்கு, முறம் போன்றவைகளை எக்காரணம் கொண்டும் எடுத்து வரக்கூடாது. இதனால் பெற்றோர் வீட்டில் நிதி நிலைமையில் பாதிப்பு ஏற்படும். அதே போல கூர்மையாள அரிவாள்மனை, கத்தி போன்றவைகளை எடுத்து வந்தாலும் இரண்டு வீட்டிற்கும் பகைமை உணர்வு அதிகரிக்கும். துடைப்பம் மகாலட்சுமியின் அம்சம் என்பதால் பிறந்த வீட்டில் இருந்து அதனை கொண்டு செல்லக்கூடாது. இதனால் நமது வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow