Chevvai Peyarchi Palan 2024 : செவ்வாய் பெயர்ச்சி.. தீபாவளி வரை குபேர யோகம் யாருக்கு தேடி வரும்?

Chevvai Peyarchi Palangal 2024 : யுத்த கிரகம் செவ்வாய் அசாதாரணமான தைரியசாலி. ரிஷபத்தில் இருந்த செவ்வாய் மிதுனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். மிதுனம் காற்று ராசி அனல் காற்று வீசும். காரணம் காற்று ராசியில் செவ்வாய் இருப்பதால் இந்த நேரத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்துகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

Aug 26, 2024 - 18:12
Aug 26, 2024 - 18:16
 0
Chevvai Peyarchi Palan 2024 : செவ்வாய் பெயர்ச்சி.. தீபாவளி வரை  குபேர யோகம் யாருக்கு தேடி வரும்?
Chevvai Peyarchi Palangal 2024 in Tamil

Chevvai Peyarchi Palangal 2024 : ரிஷபம் ராசியில் குரு உடன் கூட்டணியில் இருந்த செவ்வாய் பகவான் மிதுனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். ஆகஸ்ட் 26ஆம் தேதி இன்று முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரைக்கும் செவ்வாய் மிதுனத்தில் சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான அம்சங்களும் சில ராசிக்காரர்களுக்கு சில பாதிப்புகளும் ஏற்படும். செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று பார்க்கலாம். 

மேஷம்: 

உங்கள் ராசி அதிபதியும் எட்டாம் வீட்டு அதிபதியுமான செவ்வாய் பகவான் முயற்சி ஸ்தானமான 3ஆம்  வீட்டில் பயணம் செய்வது அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. தொட்ட காரியங்கள் துலங்கும். வெற்றிகள் தேடி வரப்போகிறது. புகழ், கௌரவம் கூடும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டு. கணவன்மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். எங்கிருந்தாவது வந்து பணம் கொட்டும். குபேர யோகமும் கோடீஸ்வர யோகமும் தேடி வரப்போகிறது.


ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்கிறார். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். பாதிப்புகளை தடுக்க முருகப்பெருமானை வணங்கி தினசரியும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். 

மிதுனம்

முன்கோபம் அதிகமாகும். வீட்டில் தம்பதியரிடையே வாக்குவாதத்தை தவிர்க்கவும். வீண் சண்டைகளை தவிர்த்து விடலாம். அலுவலகத்தில் உள்ளவர்கள் செய்யும் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் வருவது சகஜம்தான் டென்சனாகாமல் இருப்பது நல்லது.  உடல் உஷ்ணத்தால் பாதிப்பு ஏற்படும். சிறுசிறு விபத்துகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கவனமும் நிதானமும் தேவை. 

கடகம்

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பணி செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு செய்யுங்கள் எதிர்வாதம் செய்ய வேண்டாம். விரைய செலவுகள் அதிகரிக்கும். சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தினசரியும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். 

சிம்மம்

லாப ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்து பயணம் செய்வது நன்மை தரக்கூடியது. சூரியனுக்கு நண்பன் தளபதி செவ்வாய் லாபத்தில் அமர்வதால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.   பணவருமானம் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். 

கன்னி

பத்தாம் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்வதால் திடீர் யோகம் தேடி வரும். தொழில் உத்யோக ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது சிறப்பம்சம். உங்களின் சிறப்பான பணிகளால் உத்யோக உயர்வை பெற்றுத்தரும். நோய் பாதிப்பு உள்ளவர்கள் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். 

துலாம்

துலாம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் பயணம் செய்கிறார்.  உடல் நலப்பிரச்சினைகள் தீரும். தொழில் வருமானத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய முயற்சிகள் கைகூடி வரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். 

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசி நாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இது உங்களுக்கு சிறப்பானதல்ல வண்டி வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். முருகன் கோவிலுக்கு செல்லுங்கள் செவ்வாய்கிழமை செவ்வாய் பகவானை வணங்கலாம் வெள்ளிக்கிழமை துர்க்கையை வணங்கலாம்.

தனுசு 

செவ்வாய் ராசிக்கு ஏழாம் பார்வையாக பார்ப்பதால் திருமண விசயங்கள் கை கூடி வரும்.  களத்திரஸ்தானமான ஏழாம் வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் பலரின் செயல்கள் எரிச்சலை தரும். வேலைப்பளு அதிகரிக்கும். கண்களில் எரிச்சலுடன் கூடிய வலி வந்து நீங்கும் கவனம் தேவை.

மகரம் 

மகரம் ராசிக்காரர்களே. செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் உச்சமடைபவர். அவர் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்வது நற்பலன்களை தரப்போகிறார். பண வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் திருப்திகரமாக இருக்கும்.  ஆறில் செவ்வாய் அமர்வதால் எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். உங்களுக்கு மேன்மையும் யோகமும் கிடைக்கும். 

கும்பம் 

கும்பம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் பயணம் செய்கிறார். பூர்வீக சொத்துப் பிரச்சனை தலைத்தூக்கும். பாகப்பிரிவினை விஷயத்தில் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். வெளி உணவுகளை சாப்பிட வேண்டாம். கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் தீர கணபதியை வணங்கவும். கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கிறார். உங்கள் சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் பகவானால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். சில காரியங்கள் தடைப்பட்டு வெற்றிகரகமாக முடிவுக்கு வரும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வேலை செய்யும் இடத்தில் டென்சனை குறைத்துக்கொண்டால் வெற்றியும், அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும். செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசம் படிக்க கவலைகளும் துன்பங்களும் பறந்தோடும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow