Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 12 - கவனமாக இருக்க வேண்டியது யார்?

Today Horoscope Predictions in Tamil: சந்திர பகவானின் அருள் நிறைந்த திங்கட்கிழமையான இன்றைய தினம் சந்திரன் துலாம் ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Aug 12, 2024 - 05:00
Aug 13, 2024 - 09:35
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 12 - கவனமாக இருக்க வேண்டியது யார்?
Monday Rasi Palan

Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆடி மாதம் 27ஆம் நாள் ஆகஸ்ட் 12 திங்கட்கிழமை சப்தமி திதி காலை 07.55 மணி வரை அதன் பின் அஷ்டமி திதி சுவாதி நட்சத்திரம் காலை 08.33 மணி வரை அதன் பின் விசாகம் நட்சத்திரம் துர்காஷ்டமி குதம்பை சித்தர் ஜெயந்தி. சந்திரன் பயணத்தால் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் இன்றைக்கு யாருக்கு சந்திராஷ்டமம் கவனமாக இருக்க வேண்டியது யார் என்று பார்க்கலாம். 


மேஷம்

சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.  இன்றைய தினம் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் வரும். எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும்.

ரிஷபம்

சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணிக்கிறார்.  குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். மனதில் நிம்மதி பிறக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். கடன் பிரச்சினை தீரும்.

மிதுனம்

சந்திரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணிக்கிறார். பிள்ளைகளால் நன்மைகள் நடைபெறும். உங்க  உடல்நிலையில்  சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் உற்சாகம் கூடும்.  இன்றைக்கு எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

கடகம்

சந்திரன் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் பயணிக்கிறார். உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் சாதகமான பலன் உண்டாகும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.

சிம்மம்

சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணிக்கிறார். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்று குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். திருமண பேச்சுவார்த்தைகளில் லாபம் கிடைக்கும்.  வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். சுபகாரியம் நடைபெறுவதில் இருந்த தடை தாமதங்கள் நீங்கும். பேச்சில் கவனம் தேவை.  குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்குள் பயணம் செய்வதால் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வேலை விஷயமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு பயணம் செல்ல வேண்டியிருக்கும். உங்களின் உடல் ஆரோக்கியம் சீராகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். கோபத்தை கட்டுப்படுத்தவும். 

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுப விரைய செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று உங்களுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். வீட்டில்  உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் வரலாம். சுபகாரிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் நன்மைகள் நடைபெறும்.

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்க லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் திடீர் பணவரவுகள் வரும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும் கொடுத்த கடன்கள் வசூலாகும். 

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுடைய வீட்டில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் மூலம் நன்மைகள் தேடி வரும் உங்களுக்கு வேலைபளு குறையும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் வரும்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் சோர்வு ஏற்படும். வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பது நல்லது. வீட்டில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியாக பொருளாதார நிலை  சிறப்பாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

மீனம்

சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வரலாம் உணவு விசயத்தில் கவனம் தேவை. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow