Thangalaan : இறங்கி வேலை செய்யனும்.. தங்கலான் இந்திய சினிமாவிற்கு புதுசு.. அடித்து சொன்ன விக்ரம்

Thangalaan Movie Actor Vikram at Madurai : தங்கலான் திரைப்படம் இந்திய சினிமாவிற்கு புதுவிதமான கதையாக இருக்கும் என்றும் இந்த படம் வாழ்க்கையை பார்த்தது போல இருக்கும் என்று தங்கலான் திரைப்படத்தின் கதாநாயகன் விக்ரம் கூறியுள்ளார்.

Aug 12, 2024 - 01:06
Aug 12, 2024 - 21:00
 0
Thangalaan : இறங்கி வேலை செய்யனும்.. தங்கலான் இந்திய சினிமாவிற்கு புதுசு.. அடித்து சொன்ன விக்ரம்
தங்கலான் பட ப்ரோமோஷன் விழாவில் நடிகர் விக்ரம்

Thangalaan Movie Actor Vikram at Madurai : இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரம் இணைந்துள்ள தங்கலான் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பான் இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

தங்கலான் திரைப்படம்(Thangalaan Movie) சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தினை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். கோலார் தங்கச் சுரங்கத்தில் எப்படி தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது, சுரங்கத்தொழிலுக்காக மக்கள் அடிமைப்படுத்தப்பட்டது குறித்த படமாக இது உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.

படம் விரைவில் வெளியாக உள்ளதால், படத்திற்கான ப்ரோமோஷன் பணியினை படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ‘தங்கலான்’ திரைப்படத்தின்(Thangalaan Movie Promotion at Madurai) புரோமோஷன் விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம்(Actor Vikram), நடிகை மாளவிகா மோகனன், பார்வதி உட்பட திரைப்படக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய நடிகர் விக்ரம்(Actor Vikram Press Meet), “மதுரை எனக்கு ஸ்பெஷலான இடம். விடுமுறை என்றாலே எனக்கு மதுரை தான் நினைவுக்கு வரும். அனைத்து விடுமுறையிலும் இங்கு தான் இருப்பேன். 10 ஆண்டுகள், மதுரை என்றாலே மக்கள், விடுமுறை, கோவில் பாட்டு, அழகர்கோவில், பாட்டு, கழுதைகள் என அனைத்தும் நினைவுக்கு வரும். நான், மதுரை உணவை அனுபவித்து உண்பேன்.

இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் இறங்கி வேலை செய்ய வேண்டும். மாளவிகா யார் என்பதை இந்த படம் மூலம் தெரியவரும். ஆக்சன் சீன் முழுவதும் மாளவிகா என்னோடு சிறப்பாக நடித்தார். இதேபோன்று பார்வதியும் இந்த படத்தில் எனது மனைவியாக ரொம்ப ஆர்வமாக பணிபுரிந்தார்,

தங்கலான் இந்திய(Thangalaan is Indian Cinema) சினிமாவிற்கு புதுவிதமான கதையாக இருக்கும். இந்த படம் வாழ்க்கையை பார்த்தது போல இருக்கும். இசை மக்களுக்கு புரியும் வகையில், ஜிவி பிரகாஷ் புதிய சப்தங்கள், புதிய கருவிகள் பயன்படுத்தியுள்ளார்.

இந்த படத்தில் டேனிக்கு அதிகளவு காயம் ஏற்பட்டது அதன்பின் ஆப்ரேசன் செய்து 3 மாதம் ரெஸ்ட் எடுத்தார் பின்னர் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார் படத்துக்காக உயிரை கொடுத்து நடித்தார். டேனி பேசும் இங்கிலிஸ் எனக்கே தெரியும் ஆனால் அவர் அனைவரோடும் கனெக்ட் ஆகிருவாரு, இந்தியராகவே மாறிவிட்டார். 

பா.ரஞ்சித்தோடு பணி புரிந்த்து மகிழ்ச்சி. அவர், எனக்கு பிடித்த இயக்குனர். தங்கலான்(Thangalaan Movie) படத்தில் உலக சினிமா தரமும் நமது மண் வாசனையும் இருக்கும். இந்த படக்குழுவில் பணியாற்றிய கடைசி லைட்மேன் வரை அனைவருக்கும் நன்றி. இந்த படத்தை தயாரிக்க ஞானவேல் தைரியத்தோடு வந்தார். இதில் முக்கியமான படமாக அமையும், 

இந்த படம் அனைவருக்குமான படமாக இருக்கும், காந்தாரா, KGF என கன்னடத்திலும், மலையாளத்தில் தற்போது சிறப்பான படங்கள் வந்துள்ளது. இதேபோன்று இந்த படம் தேசிய அளவிலான படமாக இருக்கும், தங்கலான் படம் நம்ம வரலாறு என நீங்கள் பெருமைப்படுவீர்கள்.

எந்த படம் நடித்தாலும் அதற்கு ஏற்ப மன ரீதியாக தயார் படுத்துக்கொள்வேன். அந்த கேரக்டரை உள்வாங்கி நடிகராக மாறி விடுவேன். எனது ரசிகர் பட்டாளத்தை தியேட்டரில் பாருங்கள். எல்லா ரசிகர்களுமே எனது ரசிகர்கள் தான். தூள், சாமி போன்ற படங்களில் நடித்தவன் நான்.

டப்பிங் இல்லாமல் ஒரிஜினிலாக ஸபாட்டில் பேசியது கடும் சிரமமாக இருந்தாலும், வித்தியாசமாக இருந்தது. காதல் கதை தொடர்பான படங்கள் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow