ஆடி மாத ராசி பலன் 2024: திடீர் ஜாக்பாட் .. ஆடியில் தேடி வரப்போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!

Aadi Month Rasi Palan 2024 : ஆடி மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதம் ஆன்மீக அலைகள் நிரம்பிய மாதம். ஆன்மீக அலைகள் நிறைந்த ஆடி மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Jul 16, 2024 - 17:53
Jul 16, 2024 - 18:12
 0
ஆடி மாத ராசி பலன் 2024:  திடீர் ஜாக்பாட் .. ஆடியில் தேடி வரப்போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!
Aadi Month Rasi Palan 2024

Aadi Month Rasi Palan 2024 : ஆடி மாதம் முழுவதும் சூரியன் கடகம் ராசியில் பயணம் செய்கிறார். தமிழ் ஆண்டின் நான்காவது மாதமான ஆடி மாதம் முதல் தட்சிணாயண புண்ணிய காலம் தொடங்குகிறது.  ஆடி மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதம் ஆன்மீக அலைகள் நிரம்பிய இந்த மாதத்தில் தனுசு,மகரம்,கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம். 

தனுசு: 

சூரியன் உங்க ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சில சங்கடங்கள் ஏற்படலாம், பண விசயத்தில் வாக்கு கொடுக்காதீர்கள். அலுவலகத்தில் பேசும் போது பொறுமையும் நிதானமும் தேவைப்படும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு லாபம் கிடைக்கும். அதே நேரத்தில் பெரிய முதலீடுகள் வேண்டாம். பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேருவீர்கள். தைரியம் தன்னம்பிக்கை கூடும். ஆடி அமாவாசை(Aadi Amavasai) நாளில் குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

மகரம்:

சனி பகவானை(Sani Bhagavan) ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு இது வெற்றிகரமான மாதம். ஏழாம் வீட்டில் இருக்கும் சூரியன்,சுக்கிரன், புதன் பார்வை உங்களுடைய ராசிக்கு கிடைப்பதால் இந்த மாதம் சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் வரலாம் கவனமாக இருங்க. புது வீடு கட்டும் யோகம் வந்து விட்டது இந்த மாதம் வாஸ்து செய்யலாம். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். மிகப்பெரிய யோகம் வரும். மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது. ஆடி அமாவாசை(Aadi Amavasai) நாளில் முன்னோர்களை நினைத்து திதி கொடுப்பது நல்லது. 

கும்பம்:

ஆடி மாதம்(Aadi Tamil Month) கும்பம் ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் தேடி வரப்போகிறது. கோபத்தை கட்டுப்படுத்துங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். நல்ல செய்திகள் தேடி வரும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமூகத்தில் உங்க கவுரவம் உயரும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திடீர் ராஜயோகமும், திருமண யோகமும் கைகூடி வரும்.  இந்த மாதம் மறக்காம குல தெய்வ கோவிலுக்கு செல்வது நல்லது.

மீனம்:

மீனம் ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. பணவருமானம் அற்புதமாக இருக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள்.புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆடி 18ஆம் தேதிக்கு மேல் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு சொந்த வீடு சொத்து வாங்கும் யோகம் வரப்போகிறது. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.  வெள்ளிக்கிழமை லட்சுமி பூஜை செய்வது நன்மையை கொடுக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow