விநாயகர் சதுர்த்தி.. தக தகக்கும் கணேசா.. 66 கிலோ தங்கம்,325 கிலோ வெள்ளி ரூ.400 கோடிக்குக் காப்பீடு

மும்பையில் மிகவும் பணக்கார விநாயகர் சதுர்த்தி மண்டலாகக் கருதப்படும் ஜி.எஸ்.பி சேவா மண்டல் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு 400 கோடிக்குக் காப்பீடு செய்துள்ளது.

Aug 28, 2024 - 12:13
Aug 29, 2024 - 10:23
 0
விநாயகர் சதுர்த்தி.. தக தகக்கும் கணேசா.. 66 கிலோ தங்கம்,325 கிலோ வெள்ளி ரூ.400 கோடிக்குக் காப்பீடு
ganesh chaturthi 2024

மும்பை விநாயகர் சதுர்த்தி விழாவில் 10 நாள்களும் அதிக பக்தர்கள் வரக்கூடிய மண்டலாக லால்பாக் ராஜா விநாயகர் சதுர்த்தி மண்டல் இருக்கிறது. இங்கு பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என முக்கிய பிரமுகர்கள் வருவது வழக்கமாகும்.மிகவும் பணக்கார விநாயகர் சதுர்த்தி மண்டலாகக் கருதப்படும் ஜி.எஸ்.பி சேவா மண்டல் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு 400 கோடிக்குக் காப்பீடு செய்துள்ளது.

மும்பையில் தயாராகும் விநாயகர் சிலைகள் குஜராத் போன்ற அண்டை மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. மும்பையில் உள்ள விநாயகர் சதுர்த்தி மண்டல்களில் ஜி.எஸ்.பி சேவா மண்டல் மிகவும் பணக்கார மண்டலாகக் கருதப்படுகிறது. இந்த மண்டலில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் விக்ரகம் ஐந்து நாள்கள் பக்தர்களின் தரிசனத்திற்கு இருக்கும். அதன்பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக் கடலில் கரைக்கப்படும். 

இந்த விநாயகர் சதுர்த்தி விழாவின்போது இந்த மண்டலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவதுண்டு. அவர்கள் காணிக்கையாகத் தங்கம் மற்றும் வெள்ளியை சமர்ப்பணம் செய்கின்றனர். அவ்வாறு செலுத்தப்பட்ட தங்கம் 66 கிலோ இருக்கிறது.இந்தத் தங்கத்தை ஆபரணமாகத் தயாரித்து விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி விழாவின்போது அணிவிக்கப்படுவது வழக்கம். இது தவிர 325 கிலோ வெள்ளி ஆபரணங்களும் இருக்கின்றன.

 

இதையடுத்து ஒவ்வோர் ஆண்டும் விழாவின் போது இந்த நகைகளுக்கு மண்டல் நிர்வாகம் காப்பீடு செய்வது வழக்கம். கடந்த ஆண்டு 360 கோடி ரூபாய் அளவுக்கு ஒட்டுமொத்த மண்டலுக்கும் காப்பீடு செய்திருந்தனர். அது இந்த ஆண்டு 400 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

இது குறித்து பேசிய ஜி.எஸ்.பி சேவா மண்டல் தலைவர் அமித் பாய்,  400.58 கோடிக்கு ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள், புரோகிதர்கள் மட்டும் 3,250 பேர் பணியில் ஈடுபட இருக்கின்றனர் என்றார். இதில் தன்னார்வலர்கள், சமையல்காரர்கள், சேவை வழங்குபவர்கள், பாதுகாப்புக் கொடுப்பவர்கள், கடை உரிமையாளர்கள் என அனைவருக்கும் சேர்த்து காப்பீடாக 325 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களுக்கு ரூ.43.15 கோடி அளவுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தீவிபத்துக்கு ரூ.2 கோடிக்கும், பக்தர்கள், பந்தல் போன்றவற்றிற்கு 30 கோடிக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

இது தவிர மற்றொரு விநாயகர் சதுர்த்தி மண்டலான லால்பாக் ராஜா மண்டல் நிர்வாகம் இந்த ஆண்டு 32.76 கோடிக்குக் காப்பீடு செய்துள்ளது. மும்பை விநாயகர் சதுர்த்தி விழாவில் 10 நாள்களும் அதிக பக்தர்கள் வரக்கூடிய மண்டலாக லால்பாக் ராஜா விநாயகர் சதுர்த்தி மண்டல் இருக்கிறது. இங்கு பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என முக்கிய பிரமுகர்கள் வருவது வழக்கமாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow