மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது - இபிஎஸ்
தங்களது கொள்கையை கல்வித்துறையில் திணித்து மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமக்ரா சிக்சயா அபியான் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதல் தவணை தொகையான 573 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
தங்களது கொள்கையை கல்வித்துறையில் திணித்து மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறியுள்ளார். நிதியை பெற தகுந்த நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கான நிதியை உரத்த குரலில் போராடி பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?






