ஏழரை சனியா.. விநாயகரை கும்பிட்டால் சனிதோஷம் நீங்கும் - எப்படி வணங்குவது?

ஏழரை சனி, அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்கள் விநாயகரை வழிபட வந்த வினையும் வரப்போகும் வினையும் விலகி ஓடும். கடன் பிரச்சினையும் தீரும்.

Sep 7, 2024 - 16:05
Sep 8, 2024 - 10:16
 0
ஏழரை சனியா.. விநாயகரை கும்பிட்டால் சனிதோஷம் நீங்கும் - எப்படி வணங்குவது?
vinaygar chaturthi 2024

நவகிரகங்களில் சனிபகவான் என்றாலே பலருக்கும் பயம்தான். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி பிடித்தவர்கள் அஞ்சி நடுங்குவார்கள். சனிதோஷம் தீர எளிமையான பரிகாரம் ஒன்று உள்ளது . விநாயகரை பார்த்தாலே சனியாருக்கு பயம்தான். விநாயகரை கும்பிடுபவர்களை சனிபகவானால் எதுவும் செய்ய முடியாது என்பது நம்பிக்கை. விநாயகரை எப்படி வணங்கினால் சனிதோஷம் நீங்கும் என்று பார்க்கலாம்.

கடன் பிரச்சினையை தீர்ப்பதில் கணபதிக்கு நிகர் வேறு யாருமில்லை. இன்று போய் நாளை வா என்று அந்த சனிபகவானுக்கே பாடம் எடுத்தவர் கணபதி. மனிதர்களுக்கு ஏழரை ஆண்டு என்பது போல் சனி தசை தேவர்களுக்கு ஏழரை மாதம், கடவுள்களுக்கு ஏழரை நாள். கடவுள்களையும் விட்டு வைப்பதில்லை சனீஸ்வர பகவான். அவர் விநாயகரை பிடிக்க வேண்டிய காலம் வந்தது. 

விநாயகரை பிடிக்க வந்தார் சனீஸ்வரன். விநாயகரை வந்து வேண்டினார் சனீஸ்வரன். விநாயகப் பெருமானே என் கடமைப்படி நான் உங்களைஏழரை நாட்கள் பிடித்திருக்க வேண்டிய காலம் இது. அதற்கான பலன்களையும் நீங்கள்அனுபவிக்க வேண்டும். என் கடமையைச் செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்றார்.

விநாயகர் மறுக்கவில்லை. நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். நான் என்தாயிடம் சென்று நீங்கள் என்னை பிடிக்கவிருப்பதை சொல்லி விட்டு வருகிறேன்.நீங்கள் நாளை என்னை வந்து பிடித்துக் கொள்ளலாம். என் முதுகில் இன்று போய்நாளை வருகிறேன் என்று எழுதிவிட்டுச் செல்லுங்கள் என்று கூறினார். 

சனீஸ்வரனும் விநாயகர் முதுகில் இன்று போய் நாளை வருகிறேன் என்று எழுதிவிட்டுச் சென்று விட்டார். மறுநாள் தான் கூறியபடியே சனீஸ்வரன் வந்தார். என் முதுகில் என்னஎழுதியிருக்கிறீர்கள் படியுங்கள் என்றார் விநாயகர். இன்று போய் நாளைவருகிறேன் என்று முதல் நாள் தான் எழுதியதையே படித்தார். இப்படி சனீஸ்வரனையே ஏமாற்றியவர் விநாயகர். 

விநாயகரை பிரார்த்திப்போரை சனி தசையும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.  திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை, விநாயகருக்கு உகந்த நாட்களாகும். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர் களுக்கு அருள் கொடுப்பவர், ஆனைமுகப் பெருமான். ஏழரை சனி, அஷ்டமத்து சனி காலத்தில்தான் அதிகமாக ஒருவர் கடன் வாங்குவார்கள். கடன் பிரச்சினையில் சிக்கித் தவிப்பவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கலாம். 

விநாயகரை வேண்டிக் கொண்டு நமக்கு ஏதாவது ஒரு காரியம் நிறைவேற வேண்டுமென்றால், நாம் ஒரு ரூபாய் நாணயத்தை விநாயகர் முன்பு வைத்து வேண்டிக் கொண்டாலே போதும். நாம் வேண்டியதை விரைவில் நிறைவேற்றி விடுவார். ஆனால் மனதார பிரார்த்தனை செய்துகொண்டு நியாயமான கோரிக்கையை வைக்க வேண்டும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க, விநாயகருக்கு மோதகம் நிவேதனம் செய்ய வேண்டும். துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்க வேண்டும். கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை அமையும்.  விநாயகரை விடாது வணங்கி வந்தால்  நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி, நேர்மறைய ஆற்றல் அதிகரிக்கும். நமது மனம் அமைதியடையும் வாழ்க்கையில் நிம்மதி உண்டாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow