தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 442ஆம் ஆண்டு திருவிழா.. கொடியேற்றம் கோலாகலம்

Thoothukudi Panimaya Matha Church Festival 2024 : தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 442ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆகஸ்டு 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

Jul 26, 2024 - 17:51
Jul 27, 2024 - 09:58
 0

Thoothukudi Panimaya Matha Church Festival 2024 : தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பேராலயத்தின் 442-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூயபனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும் நடைபெற்றது. ஒன்று காலை 7 மணிக்கு மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைப்பெற்றது. தொடர்ந்து 8.30 மணியளவில் தூயபனிமய மாதா பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருவுருவம் பதித்த கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றப்பட்டவுடன் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கரவொலி எழுப்பினர். தொடர்ந்து தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் உள்ள இழுவை கப்பல்கள் மூலம் ஒலி எழுப்பட்டது.

ஆகஸ்டு 5ஆம் தேதி அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு பாளையங்கோட்டை ஆயர் அந்தோணி சாமி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. இரவு 10 மணிக்கு பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல் நற்கருனை ஆசீர் நடைபெற உள்ளது. தூயபனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow