Today Horoscope: இன்றைய ராசிபலன் செப்டம்பர் 5 - குருவின் அருளால் குபேர யோகம் யாருக்கு?

Today Horoscope Predictions in Tamil: வியாழக்கிழமையான இன்றைய தினம் குரு பகவான் அருள் நிறைந்த நாள். இன்றைய தினம் சந்திரன் கன்னி ராசியில் கேது, சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Sep 5, 2024 - 06:16
Sep 5, 2024 - 18:04
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் செப்டம்பர் 5 -  குருவின் அருளால் குபேர யோகம் யாருக்கு?
today rasi palan 2024

Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 20ஆம் நாள் செப்டம்பர் 05ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியை திதி பகல் 12.22 மணி வரை அதன்பின் திருதியை  திதி. உத்திரம் நட்சத்திரம் காலை 06.14 மணி வரை அதன் பின் ஹஸ்தம். சந்திரபகவான் அருளினாலும் சந்திரன் பயணத்தாலும் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 


மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இன்றைக்கு உங்களுக்கு மன மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். உங்களுடைய கடன் பிரச்சினைகள் தீரும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். 

ரிஷபம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். வீட்டில் உடன் பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். தடைபட்ட சுப காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். பழைய கடன்கள் வசூலாகும்.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். மருத்துவ செலவுகள் வரலாம் எச்சரிக்கை. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் வரும். கடன் பிரச்சினைகள் நீங்கும். திருமணம் சுபகாரியம் பற்றி இன்று பேசலாம்.

கடகம்

சந்திரன் இன்றைய தினம் முயற்சி ஸ்தானமாக மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகமாகும். மனதளவில் உற்சாகமாக இருப்பீர்கள். காதலிப்பவர்கள் இன்று காதலை சொல்ல வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். 

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் திடீர் சுப செலவுகள் வரும் வங்கி சேமிப்பு குறையும்.  செலவில் சிக்கனம் தேவை. இல்லாவிட்டால் கடன் வாங்க வேண்டியிருக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. 

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் கேது சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்வதால் மனதில் சஞ்சலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும்.  உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் இன்றைய தினம் லாபம் கிடைக்கும்.  உற்றார் உறவினர்களிடம் இருந்து எதிர்பாராத உதவிகள் தேடி வரும்.

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்களுக்கு பணவருமானம் தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் தேடி வரும். 

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுப செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும். உடனிருப்பவர்களால் அனுகூலம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

மகரம்

சநதிரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் வரும். வியாபாரத்தில் இன்றைக்கு லாபம் குறைவாக இருக்கும் புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். 

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகள் வரும் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது வீண் பேச்சுக்கள் பேச வேண்டாம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமும் நிதானமும் தேவைப்படும். 

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். மூன்று கிரகங்களின் பார்வை உங்கள் ராசியில் அமர்ந்துள்ள ராகுவிற்கு கிடைக்கிறது. இன்று புதிய தொழில் தொடங்குவீர்கள். கணவன் மனைவி இடையே சந்தோஷம் அதிகமாகும். புதிய வியாபாரத்தில் லாபமும் வெற்றியும் கிடைக்கும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow