நீலகிரி போற ஃப்ளான் இருக்கா?.. கனமழை வெளுத்து வாங்குமாம் கவனம்!.. வானிலை மையம் வார்னிங்

Today Weather Udpdate : சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 - 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Jul 26, 2024 - 17:42
Jul 27, 2024 - 09:56
 0
நீலகிரி போற ஃப்ளான் இருக்கா?.. கனமழை வெளுத்து வாங்குமாம் கவனம்!.. வானிலை மையம் வார்னிங்
இன்றைய வானிலை அறிக்கை

Today Weather Udpdate : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், கடலோர   மாவட்டங்களில்  ஓரிரு இடங்களிலும்  மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 20 செமீ மழை பதிவாகியுள்ளது. மேல் பவானி (நீலகிரி) , விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) தலா 10 செமீ மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார்  (கோயம்புத்தூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி) தலா 7, கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), எமரால்டு (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை  பரங்கிப்பேட்டையில் 38.0 ° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

மேற்கு வங்காளத்தை ஒட்டிய வடக்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (26.07.2024) 08:30 மணியளவில் நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களுக்கு மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். 

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,26.07.2024 மற்றும் 27.07.2024:தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

28.07.2024 முதல் 30.07.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
31.07.2024 மற்றும் 01.08.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான முதல் மிதமான  மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 - 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை  27 -  28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை  27 -  28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகளில் 26.07.2024 மற்றும் 27.07.2024 தேதிகளில் மன்னார்   வளைகுடா மற்றும்  அதனை  ஒட்டிய  தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
28.07.2024 முதல் 30.07.2024 வரை: மன்னார்   வளைகுடா மற்றும்  அதனை  ஒட்டிய  தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் 26.07.2024: மத்திய, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு வங்கக்கடல்,  வடக்கு  அந்தமான் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

27.07.2024: வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு, வடக்கு, மத்திய வங்கக்கடல், வடக்கு  அந்தமான் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29.07.2024: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு, மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை  ஒட்டிய  வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு, மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை  ஒட்டிய  வடமேற்கு வங்கக்கடல், வடக்கு  அந்தமான் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்: 

26.07.2024 முதல் 28.07.2024 வரை: மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-வடக்கு அரபிக்கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.29.07.2024 மற்றும் 30.07.2024: மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-வடக்கு அரபிக்கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow