மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூலம் திருவிழா.. செப்.11ல் சிவனுக்கு பட்டாபிஷேகம்

இறைவன் மதுரையம்பதியில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் 12 சிறுவிளையாடல்கள் ஆவணி மூலத் திருவிழாவில் முக்கிய அம்சங்களாக அமைவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

Aug 31, 2024 - 07:05
 0
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூலம் திருவிழா.. செப்.11ல் சிவனுக்கு பட்டாபிஷேகம்
aavani moolam festival


ஆவணி மாதம் முதல் மதுரையில் சிவபெருமான் ஆட்சி தொடங்க உள்ளது.  மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆவணி மூலம் திருவிழாவில் சிவபெருமான் ஆடிய திருவிளையாடல்களை தரிசிக்கலாம்.  அதே நேரத்தில் மதுரையின் மன்னனாக பட்டம் சூட்டிக்கொண்டு அரசாட்சியை தொடங்குகிறார் மீனாட்சியின் கணவன் சொக்கநாதர். 

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்புகள், திருவிளையாடல்கள் நிறைந்த ஆவணி மூல திருவிழா வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. அன்று முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை இரண்டாம் பிரகாரத்தில் காலை மற்றும் இரவு சுவாமி சந்திரசேகர் உற்சவ புறப்பாடு நடைபெறும்.

5ஆம் தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல், 6ஆம் தேதி நாரைக்கு மோட்சம் அருளிய திருவிளையாடல், 7ஆம் தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடல், 8-ம் தேதி தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடலும், 9-ம் தேதி உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடலும், 10-ம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடலும் நடக்கிறது.

11ஆம் தேதி காலை வளையல் விற்ற திருவிளையாடலும் அன்று மாலை 6:30 மணிக்கு மேல் 6:45 மணிக்குள் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். 12-ம் தேதி நரியை பரிதாக்கிய திருவிளையாடல் குதிரை கயிறு மாறிய திருவிளையாடல் நடக்கிறது.

13-ம் தேதி புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடக்கிறது. அன்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் திருக்கோவிலில் இருந்து புறப்பாடாகி ஆரப்பாளையம் புட்டு தோப்புக்கு சென்று அங்கு புட்டு உற்சவம் நடைபெற்று இரவு 9 மணி அளவில் எழுந்தருளி திருக்கோவில் வந்து சேர்த்தியாவார்.

14-ம் தேதி விறகு விற்ற லீலை நடக்கிறது. 15-ம் தேதி காலை 8:35 மணிக்கு மேல் 8 59 மணிக்குள் சட்டத்தேர் நடக்கிறது.

16-ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு திருவீதி புறப்பாடு முடிந்து 16 கால் மண்டபத்தில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமியும் திருவாதவூர் மாணிக்கவாசகர் விடை பெறுதல் நிகழ்வும் நடக்கிறது.

இறைவன் மதுரையம்பதியில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் 12 சிறுவிளையாடல்கள் ஆவணி மூலத் திருவிழாவில் முக்கிய அம்சங்களாக அமைவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். என்ன மக்களே சிவன் ஆடிய திருவிளையாடலை காண மதுரைக்கு வாங்க. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow