சுப காரிய தடையா?.. நவகிரக தோஷம் தீர.. நாக தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்

ஒரு சிலரால் தங்க நகை வாங்க முடியாது. நகை வாங்கினால் கூட வீட்டில் தங்காமல் போய் விடும். வீட்டில் தங்கம் தங்குவதற்கு நவகிரக தோஷம் நீங்குவதற்கு எளிமையான பரிகாரம் உள்ளது அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

Aug 28, 2024 - 17:49
Aug 29, 2024 - 10:20
 0
சுப காரிய தடையா?.. நவகிரக தோஷம் தீர.. நாக தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்
navagraha dosham and remedies

சென்னை: நவ கிரகங்களினால் தோஷங்கள் இருந்தாலும் காரியத்தடைகள் ஏற்படலாம்.  சிலர் எதை செய்தாலும் தோல்விதான் பரிசாக கிடைக்கும். சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி விபத்து ஏற்படும். திருமணம் நடைபெறுவதில் தடைகளும் உண்டாகும். தடைகளை உடைக்க சில பரிகாரங்களை செய்ய வேண்டும். என்னென்ன பரிகாரங்கள் செய்தால் எந்த கிரகங்களால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்று பார்க்கலாம். 

சூரியன்: சூரிய தோஷம் உள்ளவர்களுக்கு திருமண தடை ஏற்படும். கண் பார்வை குறைபாடு உண்டாகும். சூரிய பகவானுக்கு உரியது கோதுமை. கோதுமையால் தயாரித்த சுண்டலோ அல்லது உணவையோ படைத்தால், சூரிய பகவானால் ஏற்படும் பாதிப்புகள்  விலகும். கண் நோய் பிரச்சினைகள் நீங்கும்.

சந்திரன்: சந்திர பகவானுக்கு உரியது நெல். அதனால், அரிசியால் தயாரித்த உணவை படைத்து வணங்கினால், சந்திர தோஷம் நீங்கும். வாழ்நாள் முழுவதும் இன்னல்கள் ஏற்படாது. அம்மாவின் உடல்நிலையில் ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கும். மன கலக்கம் விலகும். ஒருமுறை திங்கட்கிழமையில் திருப்பதி பயணம் சென்று வரலாம். 
 
செவ்வாய்: செவ்வாய் பகவானுக்கு உரியது துவாரை. ஜாதகத்தில் செவ்வாய் பகவான் சரியில்லாத நிலையில் இருந்தால் செவ்வாய்கிழமையில் துவரையை படைத்து வணங்கினால், விபத்து, காயங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். திருமண தடை நீங்கும். இழந்த செல்வத்தை மீட்கலாம். வீடு, நிலம் வாங்கலாம். 
 
புதன்: புதனுக்குரியது பச்சை பயிறு. புதன்கிழமை பச்சைப்பயறு வைத்து புதன் பகவானை வணங்கினால், கல்வி தடை நீங்கும். புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி விளக்கேற்றி வணங்கினால் பேச்சுத்திறமை அதிகரிக்கும். ஜோதிட கலையில் புகழ் பெறலாம். பங்குச்சந்தை வணிகத்தில் வெற்றி பெறலாம்.
 
குரு: குரு பகவானுக்கு உரியது கொண்டைக்கடலை. வியாழக்கிழமையில் கொண்டைக் கடலையை படைத்து விளக்கேற்றி மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கினால், மங்கள சுபாரியங்கள் சுலபமாக நடக்கும். திருமண தடை நீங்கி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.
 
சுக்கிரன்: சுக்கிர பகவானுக்கு உரியது மொச்சை. சுக்கிர தோஷத்தால் திருமண தடை ஏற்படும். முகம் களையிழந்து காணப்படும். வெள்ளிக்கிழமை வெள்ளை மொச்சையை படைத்து விளக்கேற்றி வணங்கினால், கலைகளில் வித்தகராக திகழலாம். பெண்களுக்கு பொன்நகைகள் சேர்க்கை ஏற்படும். 


 
சனி: சனி பகவானுக்குரியது எள். எள்ளை படைத்து வணங்கினால், எந்த தடையும் நீங்கும். சனி ஹோரையில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கினால் விரோதம் விலகும். நோய் தீரும். ஆயுள் அதிகமாகும். கவலைகள் கஷ்டங்கள் நீங்கும். பூர்வீக சொத்து  கிடைக்கும். 
 
ராகு: சர்ப்ப தோஷத்தால் திருமண தடை உண்டாகும். ராகு பகவானுக்கு உரியது உளுந்து. ராகு காலத்தில் ராகு பகவானுக்கு உளுந்து படைத்து வணங்கினால், நாக தோஷம் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். துர்கை அம்மனின் அருளாசி  பரிபூணமாக கிடைக்கும். திடீர் பணக்காரனாக்கும் தன்மை இராகு பகவானுக்கு உண்டு.


 
கேது: கேது பகவானுக்குரியது கொள்ளு. கொள்ளு படைத்து வணங்கினால், வாட்டி வதைத்த நோய் தீரும். மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறையும். மனதில்  உற்சாகமும், தெம்பும் கிடைக்கும். கேதுவின் அதிபதியான விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழி பிறக்கும். 

உண்மையிலேயே பசியில் வாடும் ஒருவனுக்கு நீங்கள் அன்னத்தை தானமாக வழங்கினால் உங்களுடைய கெட்ட கர்மவினை பலன்கள் குறையும். அது போல் நவகிரக தோஷம் நீங்க சனிக்கிழமைகளில் நவதானியத்தால் செய்யப்பட்ட தோசையை சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுங்கள். நவதானிய தோசை சனிக்கிழமை செய்து சாப்பிட்டால் நவ கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்குமாம். மேலும் சனிக்கிழமையில் உண்மையான அன்னதானத்தை நீங்கள் செய்வதால் கிரக தோஷம் நீங்கும். தடைகளும் தாமதங்களும் நீங்கும் சுப காரியங்களுக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow