சனி வக்ர பெயர்ச்சி.. கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்.. பரிகாரம் என்ன?

நவ கிரகங்களில் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். ஆண்டுக்கு ஒருமுறை 4 மாத காலம் வக்ரமடைவார். கும்ப ராசியில் சஞ்சரிக்க கூடிய சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி இரவு மணிக்கு வக்ர கதியில் பயணம் செய்ய உள்ளார். சனி வக்ர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே தெரிந்து கொள்வோம்.

Jun 29, 2024 - 21:07
Jul 1, 2024 - 22:29
 0
சனி வக்ர பெயர்ச்சி.. கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்.. பரிகாரம் என்ன?
Saturn Retrograde Transit 2024

ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிக்கக் கூடிய கிரகம் சனி. சனி பகவானின் அமைப்பு சிறப்பாக இருந்து விட்டால் அவர் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையும் நல்ல வெற்றியும்,லாபத்தையும் பெற்று தரும். சனி பகவான் பயணம் செய்யும் ராசியில் இருந்து  ஐந்தாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று ஒன்பதாம் வீட்டிற்கு சூரியன் வரும் போது வக்ர நிவர்த்தியடைவார். கும்ப ராசியில் சனி தற்போது பயணம் செய்கிறார். மிதுன ராசியில் சூரியன் பயணம் செய்கிறார். ஜூன் 29ஆம் தேதி அதாவது ஆனி 15ஆம் தேதி சனிபகவான் வக்ர காலம் ஆரம்பமாகிறது. ஐப்பசி 29ஆம் தேதி அதாவது நவம்பர் 15ஆம் தேதி வக்ர காலம் முடிவுக்கு வரும். 

சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்பட்ட ராசியினருக்கு வக்ர காலத்தில் தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பணக்கஷ்டம் தீரும். கடுமையான நெருக்கடியில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும்.சனி பகவானால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனிபகவானை வணங்கலாம்.

மேஷம்: லாப சனி என்பதால் தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் புரமோசனும் கிடைக்கும்.குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பண வருமானம் அதிகரிக்கும் சேமிப்பும் கூடும்.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். 

மிதுனம்: பாக்ய சனி உங்களுக்கு அதிக நன்மைகளை கொடுப்பார்.புதிய வேலை கிடைக்கும். சுபகாரியங்களால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். 

கடகம்: அஷ்டமத்து சனி காலம் என்பதால் கடந்த சில மாதங்களாக கஷ்டங்கள் அனுபவித்து இருப்பீர்கள். சனி வக்ரமடையும் காலத்தில்  உங்களின் கஷ்டங்கள் தீரப்போகிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். அதே நேரத்தில் தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள்.

துலாம்:வேலை செய்யும் இடத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் நடைபெறும். உறவினர்களால் இருந்து வந்த உபத்திரவங்கள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சின்னச்சின்ன மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

தனுசு: உங்களுக்கு ஏழரை சனி காலம் முடிந்து விட்டது என்றாலும் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. உடல் உழைப்பு அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை.எதிர்பாராத பண வருமானம் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

கும்பம்: ஜென்ம சனி கால கட்டத்தில் சனி வக்ரமடைவதால் தடைபட்டு வந்த காரியங்கள் இனி மளமளவென நடைபெறும்.கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது.பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரப்போகிறது. பணம் விசயத்தில் உறவினர்கள் நண்பர்களுடன் இருந்த பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. 

மீனம்: ஏழரை சனி காலத்தில் சனி வக்ரமடைகிறார். இனி எல்லாம் ஜெயமாக இருக்கப்போகிறது. புதிய முதலீடுகளை தவிர்க்கவும். தொட்டதெல்லாம் பொன்னாகும். பண வருமானம் அதிகம் வந்தாலும் சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். நல்ல வேலைக்காக காத்திருப்பவர்கள் ஜூலை முதல் முயற்சி செய்யலாம். தீபாவளிக்கு முன் நல்ல செய்தி தேடி வரப்போகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow