Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 31- சனி மகா பிரதோஷ நாளில் சங்கடம் யாருக்கு தீரும்?

Today Horoscope Predictions in Tamil: சனிக்கிழமையான இன்று சனி பகவானின் அருள் நிறைந்த நாள். இன்றைய தினம் சந்திரன் கடக ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Aug 31, 2024 - 05:00
Aug 31, 2024 - 18:34
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 31-  சனி மகா பிரதோஷ நாளில் சங்கடம் யாருக்கு தீரும்?
Today Rasi Palan 2024

Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 15ஆம் நாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி சனிக்கிழமை திரயோதசி திதி. பூசம் நட்சத்திரம் இரவு 07.30 மணி வரை அதன் பின் ஆயில்யம் நட்சத்திரம். இன்று சனி மகா பிரதோஷம்.  சனி பகவான் அருளினாலும் சந்திரன் பயணத்தாலும் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 


மேஷம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு நான்காவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டியிருக்கும். எடுக்கும் முயற்சிகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியுடன் சுபகாரிய பேச்சுக்கள் சுமூகமாக முடியும்.

ரிஷபம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும். வீட்டின் தேவைகள் நிறைவேறும். உங்களுடைய வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். நீண்ட நாட்களுக்கு முன்பு கொடுத்த பணம் வசூலாகும். பொன்பொருள் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கடகம்

சந்திரன் உங்களுடைய ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் வருமானம் பெருகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்

சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்வீர்கள். வெளிவட்டார நட்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். காரிய வெற்றி ஏற்படும்.

கன்னி

சந்திரன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எடுத்த காரியம் வெற்றிகரமாக முறையும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும். 

துலாம்

சந்திரன் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். பெண்களுக்கு பணிச்சுமை குறையும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுடைய குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். சகோதரர்களிடம் சண்டை ஏற்பட்டு ஒற்றுமை குறையும். வீண் விரயங்களால் கையிருப்பு குறையும். சிக்கனமாக செயல்படாவிட்டால் கடன் பிரச்சினை ஏற்படும். 

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வேலை விசயமாக திடீர் மன உளைச்சல், தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். இன்றைக்கு நல்ல செய்தி ஒன்று தேடி வரும்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். கடன்கள் குறையும். 

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் வேலைபளு குறையும். திடீர் இடமாற்றம் ஏற்படும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow