Aadi Pooram 2024 : ஆண்டாள் மடியில் தலை சாய்த்து சயனித்த ரங்கமன்னார்.. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் கோலாகலம்

Aadi Pooram Festival 2024 in Srivilliputhur : ஆடிப்பூரம் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ ஆண்டாளின் மடியில் தலை வைத்து ஸ்ரீ ரங்கமன்னார் படுத்திருக்கும் சயன திருக்கோலத்தை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Aug 6, 2024 - 14:49
Aug 6, 2024 - 15:06
 0
Aadi Pooram 2024 : ஆண்டாள் மடியில் தலை சாய்த்து சயனித்த ரங்கமன்னார்.. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் கோலாகலம்
Aadi Pooram Festival 2024 in Srivilliputhur

Aadi Pooram Festival 2024 in Srivilliputhur : ஆண்டாள் அவதார தினமான ஆடிப்பூரம் திருவிழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பூரத்திருவிழாவின் 7ம் நாள் நிகழ்வான  ஸ்ரீ ஆண்டாள் மடியில் ஸ்ரீ ரங்கமன்னார் சயனித்திருக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சயன திருக்கோலத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் 

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். பூமா தேவியின் அம்சமான ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள துளசி வனத்தில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தார். பெரியாழ்வார் அவரை எடுத்து வளர்த்தார்.இறைவனுக்காக தொடுக்கப்பட்ட மாலையை தான் அணிந்து அழகு பார்த்து கொடுத்த காரணத்தால் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று பெயர் பெற்றவர் ஆண்டாள் நாச்சியார். 

கோதையாகிய ஸ்ரீஆண்டாள் பிறந்த ஊராகிய இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் திரு ஆடிப்பூர விழா கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது தொடர்ந்து மூன்றாம் தேதி 5 கருட சேவை நடைபெற்றது. ஆடிப்பூர திருவிழா உற்சவத்தில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த நட்சத்திரமான ஆடிப் பூரம் அன்று நடைபெறும் தேர்த்திருவிழா மிக முக்கியமான நிகழ்ச்சியாகும்

அதற்கு அடுத்து முக்கியத்துவம் வாய்த்த நிகழ்ச்சியாக கருதப்படுவது கிருஷ்ணன் கோவிலில் உள்ள முன் மண்டபத்தில் சயன சேவை நிகழ்ச்சியாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வாக ஸ்ரீஆண்டாள் மடியில், ஸ்ரீ ரெங்கமன்னார் சயனித்திருக்கும் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றது.

 வழக்கமாக எல்லா ஊர்களிலும் ஸ்ரீ ரங்கநாதரின் காலடியில் தான் ஸ்ரீ லட்சுமி தேவி இருப்பார். ஆனால் இங்கு மட்டும் தான் ஸ்ரீ லஷ்மி தேவியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாளின் மடியில் தலை வைத்து ஸ்ரீ ரங்கநாதர் படுத்திருக்கும் சயன திருக்கோலம் மிக விசேஷமானதாகும். இக்காட்சியைக் காண நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர திருவிழா தேரோட்டம் நாளைய தினம் ஆகஸ்ட்  7 ஆம் தேதி நடைபெறுகிறது. தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கானோர் வருகை தருவார்கள் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow