This Week OTT Release: தங்கலான், வாழா இன்னும் பல... இந்த வார ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ் இதோ!

இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு தங்கலான், பேச்சி, வாழா உள்ளிட்ட மேலும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் காத்திருக்கின்றன. இதுகுறித்து முழுமையான தகவல்களை தற்போது பார்க்கலாம்.

Sep 19, 2024 - 15:22
 0
This Week OTT Release: தங்கலான், வாழா இன்னும் பல... இந்த வார ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ் இதோ!
இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்

சென்னை: சீயான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. கடந்த மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான தங்கலான், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பா ரஞ்சித்தின் வழக்கமான ஸ்டைலில் இல்லாமல், மேஜிக்கல் ஃபேண்டஸி மூவியாக உருவாகியிருந்தது தங்கலான். இதனால் ரசிகர்களிடம் கொஞ்சம் அதிருப்தி இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்நிலையில் தங்கலான் திரைப்படம் இந்த வாரம் முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. தங்கலான் படத்தை ஓடிடியில் மிஸ் செய்த ரசிகர்கள், ஓடிடியில் பார்க்க ரெடியாகிவிட்டனர்.

தமிழ் ரசிகர்களுக்கு மேலும் ஒரு ட்ரீட்டாக பேச்சி திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. ராமச்சந்திரன் இயக்கத்தில் காயத்ரி, பால சரவணன், ப்ரீத்தி நெடுமாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த மூவி, கடந்த மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள பேச்சி படத்துக்கு ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில், பேச்சி திரைப்படம் இந்த வாரம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது. இதுதவிர தமிழில் சாலா, காஃபி ஆகிய திரைப்படங்கள் ஆஹா தமிழ் ஓடிடியிலும், டோபோமைன் (Dopamine) திரைப்படம் சிம்பிளி சவுத் தளத்திலும் வெளியாகின்றன. தலைவெட்டியான் பாளையம் என்ற வெப் சீரிஸ், அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.

மலையாளத்தில் வாழா திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. ஆனந்த் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. 4 கோடி பட்ஜெட்டில் உருவான வாழா, பாக்ஸ் ஆபிஸில் 40 கோடி ரூபாய் வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப் படம் வரும் 23ம் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதேபோல், மலையாளத்தில் மீனா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஆனந்தபுரம் டைரீஸ் (Aanandhapuram Diaries) என்ற திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. 

தெலுங்கில், சோபத்துலு (Sopathulu) திரைப்படம் ETV Win ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திரகபாதர சாமி (Tiragabadara Saami), மாருதி நகர் சுப்ரமணியம் திரைப்படங்கள் ஆஹா ஓடிடியிலும் வெளியாகின்றன. இந்தியில் தி கிரேட் இந்தியன் கபில் ஷோ (The Great Indian Kapil Show) சீசன் 2 நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த வாரம் வெளியாகிறது. Jo Tera Hai Wo Mera Hai, Ruslaan ஆகிய திரைப்படங்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இந்த வாரம் முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. 

நெட்பிளிக்ஸ் தளத்தில் The Queen of Villains என்ற ஜப்னீஷ் வெப் சீரிஸ், Twilight Of The Gods, Blood Legacy, His Three Daughters ஆகிய வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. அதேபோல், What's Next The Future With Bill Gates என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸும் நெட்பிளிக்ஸில் இந்த வாரம் வெளியாகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடியில் The Mystery Of Moksha Island, Agatha House Of Harkness ஆகிய வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow