தமிழ்நாடு

Thottapetta Hills Visit : சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.... தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல அனுமதி!

Thottapetta Hills Visit : ஆறு நாட்களுக்குப் பிறகு உதகையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Thottapetta Hills Visit : சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.... தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல அனுமதி!
தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல அனுமதி

Thottapetta Hills Visit : நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகரங்களிலேயே உயரமானது என்றால் அது தொட்டபெட்டா மலை சிகரம்தான். இதன் உயரம் 2636 மீட்டர் ஆகும். இதற்கு அடுத்தபடியாக 2530 மீ உயரம் கொண்ட ஸ்நோ டவுன் ஹில்லும், 2448 மீ உயரமுள்ள கிளப் ஹில்லும், 2466 மீ உயரமுள்ள எல்க்ஹில்லும் உள்ளன. இந்தச் சிகரங்களுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குதான் உதகமண்டலம். ஊட்டியிலிருந்து 10 கி.மீட்டரில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம் கிழக்கு – தென் கிழக்காக அமைந்துள்ளது. மேற்கு நிலப் பகுதியில் வடக்கு தெற்காக நீளும் மலைத்தொடரில் தொட்டபெட்டாதான் உயரமான சிகரமாகும். புகழ்பெற்ற இந்த சிகரத்தில் அமைந்துள்ள தொலைநோக்கி காட்சி முனையிலிருந்து ஊட்டியின் அழகை ரசிக்க ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். 

சீசன் நேரங்களில் தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த பாஸ்ட் டேக் நுழைவு கட்டண சோதனை சாவடியின் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை சரிசெய்ய பொதுமக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பாஸ்ட் டேக் மற்றும் சோதனை சாவடியை மாற்று இடத்திற்கு அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. அதேபோல் சோதனை சாவடிக்கு தரைக்கீழ் கேபிள் ஓயர்கள் அமைக்கும் பணிகளும், சாலையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. 

இந்நிலையில் சீரமைப்பு பணிகளும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததால் கடந்த 20ம் தேதி முதல் தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இப்பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளதால் சுமார் 6 நாட்கள் கழித்து தொட்டபெட்டா செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வரவிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு அதிகளவில் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் 25 டோல்கேட்டில் கட்டணம் உயர்வு? லிஸ்ட் இதோ!

தற்போது கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறை என தொடா் விடுமுறை காரணமாக உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்து காணப்பட்டனா். குறிப்பாக உதகையில் உள்ள உலக புகழ்பெற்ற அரசு தாவரவயல் பூங்காவில் உள்ள வானுயா்ந்த மரங்கள் மற்றும் கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ண மலா்களை கண்டு ரசித்து மகிழ்ந்தனா். மேலும் உதகையில் காணப்படும்   இதமான காலநிலையை அனுபவித்தவாறு படகு சவாரி செய்தும் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினா்.