August Month Released Movies List 2024 : அடுத்தடுத்து 26 படங்கள் ரிலீஸ்...ஆகஸ்ட் மாதம் ‘வசூலை’ அள்ளியதா, தமிழ் சினிமா?

August Month Released Movies List 2024 : தமிழில் ஆகஸ்ட் மாதம் 26 படங்கள் ரிலீஸ். இதில் சில படங்கள் மட்டுமே வசூலை அள்ளி, லாபம் சம்பாதித்துள்ளன. பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், இது ஆரோக்கியமான விஷயமல்ல என்கிறார்கள் கோலிவுட்டில்.

Aug 24, 2024 - 16:08
Aug 24, 2024 - 16:18
 0
August Month Released Movies List 2024 : அடுத்தடுத்து 26 படங்கள் ரிலீஸ்...ஆகஸ்ட் மாதம் ‘வசூலை’ அள்ளியதா, தமிழ் சினிமா?
ஆகஸ்ட் ரிலீஸ் நிலவரம்

August Month Released Movies List 2024 : அடுத்த மாதம், அதாவது செப்டம்பர் 5ம் தேதி விஜய் நடித்த கோட் வெளியாகிறது. அக்டோர் 10ம் தேதி ரஜினி நடித்த வேட்டையன், சூர்யாவின் கங்குவா படங்கள் ரிலீஸ் ஆகின்றன. தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம்ரவியின் பிரதர், துல்கர்சல்மானின் லக்கி பாஸ்கர் படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், அடுத்த இரண்டு மாதங்கள் சின்ன பட்ஜெட் படங்களுக்கு, புதுமுக நடிகர்கள் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத சூழ்நிலை. அதையும் மீறி தியேட்டர் போட்டாலும் பெரிய படங்களின் மோதி ஜெயிக்க முடியாத சூழ்நிலை. விளைவு, இந்த ஆகஸ்ட் மாதம் 26 படங்கள் ரிலீஸ்.

குறிப்பாக, ஆகஸ்ட் 2ம் தேதி சிம்புதேவனின் போட், விஜய்ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன், ஆனந்த இயக்கிய நண்பன் ஒருவன் வந்தபிறகு, தெருக்கூத்து பின்னணியில் ஜமா, திரில்லர் படமான பேச்சி, நகுல் நடித்த வாஸ்கோடகாமா என 6 படங்கள் வெளியாகின. ஆகஸ்ட் 10ம் தேதி பிரசாந்த் நடித்த அந்தகன், ஹலிதாஷமீம் இயக்கிய  மின்மினி, வேல.ராமமூர்த்தி நடித்த வீராயிமக்கள், தமன் நடித்த  பார்க், புதுமுகங்கள் நடித்த சூரியனும் சூரியகாந்தியும்,லைட் ஹவுஸ் ரஞ்சித் நடித்த கவுண்டம்பாளையம், பி2 ஆகிய 8 படங்கள் ரிலீஸ் ஆகின.  ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான், சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்திசுரேஷ் நடித்த ரகுதாத்தா, அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த டிமான்டிகாலனி2 ஆகிய  3 படங்கள்  வெளியாகின.

இந்த வாரம்(ஆகஸ்ட் 23ம் தேதி) மட்டும்  மாரிசெல்வராஜ் இயக்கிய ‘வாழை’, சூரி நடித்த ‘கொட்டுக்காளி’, விமல் நடித்த  ‘போகுமிடம் வெகுதுாரமில்லை’, வெற்றி நடித்த ‘அதர்மக்தைகள்’, புதுமுகங்கள் நடித்த ‘‘சாலா’, ‘கடமை’ ஆகிய 6 படங்கள் ரிலீஸ். ஆகஸ்ட் 30ம் தேதி அர்ஜூன் நடித்த விருந்து, புதுமுகங்கள் நடித்த செம்பியன் மாதவி, நானி நடிக்கும் சூர்யாஸ் சாட்டர்டே ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. ஆக, கூட்டிக்கழித்து பார்த்தால் ஆகஸ்ட் மாதம் 26 படங்கள் ரிலீஸ். சரி, இதில் வெற்றி பெற்ற படம் எது? வசூலை, லாபத்தை அதிகம் அள்ளிய படம் எது? ஆகஸ்ட் மாதம் தமிழ் சினிமா நிலவரம் எப்படி என்று விசாரித்தால், உண்மையிலே அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன

ஆகஸ்ட் மாதம் வெளியான 26 படங்களில் பெரும்பாலான படங்கள், இன்னும் சொல்லப்போனால் ஒன்றிரண்டு படங்களை படங்களை தவிர, மற்ற படங்கள் தோல்வியை தழுவி இருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் வசூல் நிலவரம் திருப்திகரமாக இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். சரி, இந்த மாதம் வெளியான படங்களில் ஓரளவு லாபம் சம்பாதித்த படம் எவை என்று விசாரித்தால், காயத்ரி, பாலசரவணன், ராம்நாத் நடிக்க, ராமச்சந்திரன் நடித்த திரில்லர் படமான பேச்சி வெற்றி பெ ற்றுள்ளது. கதைக்களம், சின்ன பட்ஜெட் காரணமாக இந்த படம் வெற்றி பெற்றுள்ளது. படக்குழு கேக் வெ ட்டி கொண்டாடியுள்ளது. வெற்றி விழாவையும் நடத்தியுள்ளது. அடுத்ததாக, அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியாபவானிசங்கர் நடித்த டிமான்டிகாலனி2 வெற்றிப்பெற்றுள்ளது. இதுவரை இந்த படம் 30 கோடிவரை வசூலித்துள்ளது. இப்போதும் 350 தியேட்டர்களில்  ஓடிக்கொண்டு இருக்கிறது. மாரிசெல்வராஜின் வாழை படத்துக்கு நல்லஓபனிங் கிடைத்துள்ளது. அதுவும் வெற்றி படத்தில் சேர வாய்ப்பு.

ஆக, ஆகஸ்ட் மாதம், தமிழ் சினிமாவுக்கு அதிர்ச்சியே கிடைத்து இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிம்புதேவனின் போட், விஜய்ஆண்டனியின் மழைபிடிக்காத மனிதன், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஜமா ஆகிய படங்கள் ஓடவில்லை. அந்தகன், தங்கலான் படங்களின் வசூல் நிலவரம் திருப்தி என்று கூறப்பட்டாலும், இன்றுவரை அந்த படங்களில் உண்மயான வசூல் நிலவரம் அறிவிக்கப்படவில்லை. தங்கலான்  100 கோடியை தொட்டதா என்று யாருக்கும் தெரியவி்ல்லை. இப்படியாக ஆகஸ்ட் மாதம் கழியப்போகிறது.

26 படங்களில் 2 படங்கள் மட்டுமே வெற்றி என்பது, உண்மையிலே தமிழ்சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம் இல்லை. தோல்வி அடைந்த படங்களில் பெரும்பாலானவை சின்ன பட்ஜெட் படங்கள், புதுமுகங்கள் நடித்த படங்கள். பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு சுமாரான விமர்சனம் அல்லது கலவை விமர்சனம் வந்தாலும் ஓடிவிடுகிறது. அந்தவகையில்  தனுஷ் நடித்த ராயன் வெற்றி பெற்றது. விஜயின் கோட், ரஜினியின் வேட்டையன், சிவகார்த்திகே யனின் அமரன், சூர்யாவின் கங்குவா படங்களுக்கு நல்ல வரவேற்பு, புக்கிங் இருக்கும் என தெரிகிறது. ஆனாலும் அந்த படங்களின் கதை, கமர்ஷியல் விஷயங்கள், மக்களுக்கு பிடித்து இருந்தால் மட்டுமே லாபகரமான படமாக மாறும். இந்த ஆண்டு 10 சதவீத படங்கள் மட்டுமே வெ ற்றி பெறும், தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுக்கும் என்று தெரிகிறது  என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow