Google Pixel 9 Discount Offer : 'கூகுள் பிக்சல் 9' போனுக்கு கொட்டிக்கிடக்கும் ஆஃபர்.. மிஸ் பண்ணாதீங்க மக்களே!
Google Pixel 9 Discount Offer : இதேபோல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விவோ வி40 ப்ரோ 5ஜி (vivo V40 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு 8% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அதாவது ரூ.60,999 விலை கொண்ட இந்த போனை இப்போது ரூ.55,999 என்ற விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும். மொத்தமாக ரூ.5,000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது
Google Pixel 9 Discount Offer : கூகுள் நிறுவனம் அண்மையில் கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9) ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த போனின் விலை ரூ.79,999 ஆகும். ஃப்ளிப்கார்ட்டில்(Flipkart) ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால் ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கும்.
மேலும் ஆக்சிஸ் வங்கி கார்டு மூலம் இந்த போனை வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும். இது தவிர இந்த போனுக்கு ரூ.48,100 வரை எக்ஸ்சேஞ்ச் ஆபரும் உண்டு. கூகுள் பிக்சல் 9 போனின் அம்சங்களை பொறுத்தவரை இதில் 6.3 இன்ச் OLED HDR10+ டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. 128GB 12GB RAM மற்றும் 256GB 12GB RAM என 2 வேரியன்ட்களில் இந்த போன் கிடைக்கிறது.
கேமராவை பொறுத்தவரை 50 MP வைட் கேமரா, 48 MP அல்ட்ரா வைட் கேமரா, 10.5 MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 27W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 4700 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இதேபோல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விவோ வி40 ப்ரோ 5ஜி (vivo V40 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு 8% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அதாவது ரூ.60,999 விலை கொண்ட இந்த போனை இப்போது ரூ.55,999 என்ற விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும். மொத்தமாக ரூ.5,000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும். மற்ற வங்கிகளின் கிரெடிட் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால் ரூ.5,600 தள்ளுபடி கிடைக்கும்.
விவோ வி40 ப்ரோ 5ஜி போனில் 6.78 இன்ச் AMOLED HDR10+ டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. 256GB 8GB RAM, 256GB 12GB RAM மற்றும் 512GB 12GB RAM என 3 வேரியன்ட்களில் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கிறது. 50 MP மெயின் கேமரா, 50 MP செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது. இதேபோல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், Fingerprint, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5500 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?