சினிமா

Amaran: “துப்பாக்கிய கரெக்ட்டா Handle பண்ணனும்..” அமரன் விழாவில் தக் லைஃப் கொடுத்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் அடுத்த மாதம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இன்ட்ரோ விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், துப்பாக்கி குறித்து விளக்கம் கொடுத்தது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Amaran: “துப்பாக்கிய கரெக்ட்டா Handle பண்ணனும்..” அமரன் விழாவில் தக் லைஃப் கொடுத்த சிவகார்த்திகேயன்
விஜய் - சிவகார்த்திகேயன்

சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தை, கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சய் பல்லவி நடித்துள்ள இந்தப் படம், வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவாகியுள்ளது. இந்தாண்டு தீபாவளிக்கு ஜெயம் ரவியின் பிரதர், கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் படங்களுடன் சிவகார்த்திகேயனின் அமரனும் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப் படத்தின் இன்ட்ரோ விழா சென்னையில் நடைபெற்றது.

அதில், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். தனது கெரியரில் சிவா ராணுவ வீரராக நடித்துள்ள முதல் திரைப்படம் அமரன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் காஷ்மீர் போன்ற பனிப்பிரதேச பகுதிகளில் நடைபெற்றது. முதலில் அங்குள்ள குளிரை சமாளிக்க ரொம்பவே கஷ்டமாக இருந்ததாகவும், ஆனால் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை பார்த்ததும் அந்த கஷ்டமெல்லாம் மறந்துவிட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.   

அதேபோல், அமரன் இன்ட்ரோ விழாவில் சிவகார்த்திகேயனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில் துப்பாக்கியின் வெயிட் எப்படி இருந்தது என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சிவா, ”துப்பாக்கி எப்போதும் கனமாக தான் இருக்கும், ஆனால் அதை சரியா ஹேண்டில் செய்ய வேண்டும்” என தக் லைஃப் கொடுத்திருந்தார். இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான விஜய்யின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

அந்த காட்சியில் சிவகார்த்திகேயன் கையில் விஜய் ஒரு துப்பாக்கியை கொடுத்திருப்பார். அது அரசியலுக்கு செல்லவுள்ள விஜய், சினிமாவில் இனி தனது இடம் சிவகார்த்திகேயனுக்கு தான் என சொல்லாமல் சொல்வது போல இருந்தது. இதனால் தற்போது சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்ட கேள்வி விஜய் கொடுத்த துப்பாக்கியின் கனம் குறித்து தான் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல், இதனை புரிந்துகொண்டு தான் சிவாவும் துப்பாக்கி எப்போதும் கனமாக தான் இருக்கும், ஆனால் அதை சரியா ஹேண்டில் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதாகவும் நெட்டிசன்கள் வைரல் செய்து வருகின்றனர்.