ப.ரஞ்சித் யாரு? அவர் அரசியல்வாதியா? பட்டென கேட்ட அமைச்சர் சேகர்பாபு

Minister PK Sekar Babu About Pa Ranjith : பா. ரஞ்சித் யார் என்று எனக்கு தெரியாது அவர் அரசியல்வாதியாக இருந்திருந்தால் எனக்கு தெரிந்திருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Jul 22, 2024 - 11:53
Jul 22, 2024 - 12:46
 0
ப.ரஞ்சித்  யாரு? அவர் அரசியல்வாதியா? பட்டென கேட்ட அமைச்சர் சேகர்பாபு
Minister PK Sekar Babu About Pa Ranjith

Minister PK Sekar Babu About Pa Ranjith : பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்(Armstrong) கடந்த 5ம் தேதி, 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டம்ஒழுங்கு தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடிவருகிப்ன்றன. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை(Armstrong Murder) தொடர்பாக இயக்குனர் பா. ரஞ்சித்(Director Pa Ranjith) தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். 

இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின்(Bahujan Samaj Party) மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை சலசலப்பு, பதற்றம், ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும் என்று பதிவிட்டிருந்தார். 

இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:

சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?

சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?என்று கேள்வி எழுப்பியிருந்தார் ப.ரஞ்சித்.

இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியின் போது திமுக மற்றும் திமுக அமைச்சர்களை கடுமையாக சாடி பேசினார் ப.ரஞ்சித்.சென்னையில் ஒரு மேயர் இருக்கின்றார். பிரியா நீங்கள் திமுகவில் இருப்பதால் மேயர் இல்லை. ரிசர்வேஷன் தொகுதி இருந்ததால்தான் நீங்கள் இன்றைக்கு மேயர். ரிசர்வேஷன் தொகுதி: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்ககூடிய கயல்விழி செல்வராஜ், ஆம்ஸ்ட்ராங் இறந்ததற்கு வந்து பார்க்ககூட இல்லை. சமூகநீதி குறித்து பேசும் திமுக அரசு சென்னையைக் கட்டி ஆண்ட தலைவருக்கு சென்னைக்கு வெளியே புதைக்க இடம் கொடுக்கீன்றீர்கள். இதுதான் உங்களின் சமூக நீதியா? திமுக அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம் சென்னையில் ஆம்ஸ்ட்ராங் அண்ணனுக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் நான் பா. ரஞ்சித் கருத்துக்கு திமுக பிரபலங்கள் சிலர் பதிலடி கொடுத்து வருகிற நிலையில் அமைச்சர் சேகர்பாபுவிடம்()Sekar Babu இயக்குனர் பா ரஞ்சித் திமுகவை விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் சேகர்பாபு ப.ரஞ்சித் யார்(Who is Pa Ranjith) என்று எனக்கு தெரியாது அவர் அரசியல்வாதியாக இருந்திருந்தால் எனக்கு தெரிந்திருக்கும் என்று கூறினார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குநர் ப.ரஞ்சித், கடந்த சில ஆண்டுகளாக திமுக ஆதரவாக இருந்தவர், திமுகவுக்கு தான் கடந்த தேர்தலில் வாக்களித்தேன் என்று கூறியவர், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார் ரஞ்சித்.  அவரை யார் என்றே தெரியாது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow