ரஜினியால் அப்போது இந்தியன் படத்தில் நடிக்க முடியாமல் போக, அவருக்குப் பதிலாக தான் கமல்ஹாசன்(Kamal Haasan) கமிட்டானார். இதுபற்றி இயக்குநர் ஷங்கரே(Shankar) பல பேட்டிகளில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. கமலின் விக்ரம் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்க, அதற்கு ஜெயிலர் மூவி மூலம் பதிலடி கொடுத்திருந்தார் ரஜினி. இதனால் ஜெயிலருக்கு இந்தியன் 2 மூலம் கமல் தக் லைஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியன் 2ம் பாகமோ ரஜினியின் லால் சலாம் படத்தை விட மோசமாக தோல்வியடைந்துள்ளது.
சினிமா
Rajini: “அப்போ பார்க்கல... இப்போ நல்லா இருக்கு..” ரஜினியின் இந்தியன் 2 விமர்சனம்... அந்த ரியாக்ஷன்!
Actor Rajinikanth Praised Indian 2 Movie : கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Actor Rajinikanth Praised Indian 2 Movie : கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2ம் பாகம் கடந்த 12ம் தேதி வெளியானது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான இந்தியன் 2(Indian 2) படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களை கதற வைத்துவிட்டார் இயக்குநர் ஷங்கர். கமலின் இந்தியன் தாத்தா கெட்டப், மேக்கிங், கதை, திரைக்கதை, அனிருத்தின் பிஜிஎம் என எல்லாமே கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதனால் இந்தியன் 2 படத்தின் ஓபனிங் கூட மிக மோசமாக உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ரிலீஸாகி இரண்டு வாரங்கள் ஆகியும் இந்தியன் 2 கலெக்ஷன் 100 கோடியை தொடவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்துக்கு ரஜினி சொன்ன விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் அம்பானி இல்ல திருமண விழாவுக்காக மும்பை சென்றிருந்த ரஜினி, மேரேஜ் கொண்டாட்டத்தில் ஆட்டம் போட்டு வைப் கொடுத்திருந்தார். அப்போது தான் இந்தியன் 2 வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனால் தான் அம்பானி இல்ல திருமணத்தில் ரஜினி ஜாலியாக ஆட்டம் போட்டாரா என்றெல்லாம் நெட்டிசன்கள் கிளப்பி விட்டனர். அதேபோல், மும்பையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினியிடம் இந்தியன் 2 படம் பார்த்தாச்சா என கேட்ட செய்தியாளர்களிடம் ‘இல்லை’ என சொல்லிவிட்டு கிரேட்டாக எஸ்கேப் ஆனார் சூப்பர் ஸ்டார்.
இந்நிலையில், மும்பையை அடுத்து கேரளாவில் நடைபெற்ற திருமண விழா ஒன்றிற்கு சென்றிருந்தார் ரஜினிகாந்த். அதன்பின்னர் சென்னை திரும்பிய அவரிடம் இந்தியன் 2 குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஜினி, ‘இந்தியன் 2 நல்லா இருக்கு... நல்லா இருக்கு..’ மட்டும் என சொல்லிவிட்டு அப்பாவியாக ஒரு ரியாக்ஷன் கொடுத்தார். இதனை ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள், ரஜினி இந்தியன் 2 படத்தை பார்த்த மாதிரியே தெரியவில்லையே என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 1996ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின் கதையை முதலில் ரஜினியிடம் தான் கூறியிருந்தார் ஷங்கர்.
விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய ரஜினியிடம், அவரது வேட்டையன் திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்றும் கேட்கப்பட்டது. தசெ ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம் அக்டோபரில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், சூர்யாவின் கங்குவா அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளதால், வேட்டையன் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் இன்னும் முடியவில்லை எனத் தெரிகிறது. இதனால் வேட்டையன் ரிலீஸ் குறித்து பதில் கூறிய ரஜினி, தேதி இன்னும் முடிவாகவில்லை என சொன்னபடி வெளியேறினார்.