Gautam Gambhir on ODI World Cup 2024 : இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம்(Rahul Dravid) முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் நிறைவுபெற்றது. ரோஹித் சர்மா(Rohit Sharma) தலைமையிலான இந்திய வீரர்களும், ராகுல் டிராவிட்டின் கைகளில் கோப்பையை வென்று கொடுத்து அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க அடுத்த வாரம் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணி தேர்வில் பல்வேறு சர்ச்சை கிளம்பின. அதாவது சூப்பர் பார்மில் உள்ள ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
குறிப்பாக, ரோகித் சர்மா ஓய்வால் இலங்கை தொடருக்கு இந்திய அணியின் அடுத்த கேப்டனாக, டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக பணியாற்றிய ஹர்திக் பாண்டியா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிட்னஸ் காரணத்தைக் கூறி இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக சூர்யகுமாரும், துணைக் கேப்டனாக சப்மன் கில்லும் நியமிக்கப்பட்டனர்.
“2 ஆண்டுகள் அனைத்து டி-20 போட்டியிலும் விளையாடும் வகையிலான வீரருக்கு கேப்டன்சி கொடுக்க வேண்டும்” என கம்பீர் தேர்வுக்குழுவினரிடம் கூறியதால், ஹர்திக் பாண்டியா நீக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கேப்டனை நீக்க கம்பீருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என ஹர்திக் பாண்டியாவைவிற்கு ஆதரவாகவும், கம்பீருக்கு எதிராகவும் குரல் கொடுத்தனர்.
மேலும், இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீரின்(Gautam Gambhir) விருப்பத்தின் படியே இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாகவும் கருத்துக்கள் வெளியானது. இந்நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி(Virat Kohli) இருவரும் எவ்வளவு நாட்கள் விளையாடுவார்கள் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள கவுதம் கம்பீர், "டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, 50 ஓவர் உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, பெரிய அளவிலான தொடரிகளில், தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் காட்டியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தங்களது உடற்தகுதியை தக்க வைத்துக் கொள்ள முடிந்தால், அவர்களுகளால் நிறைய நாட்கள் கிரிக்கெட் விளையாட வாய்ப்பிருக்கிறது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நான் மிகத் தெளிவாகக் கூறக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டி இருக்கிறது. மிக முக்கியமாக, 2025இல் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி, நவம்பர் 2024இல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சுற்றுப்பயணம் ஆகியவை உள்ளன. நிச்சயமாக அவர்கள் போதுமான உந்துதலுடன் இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் உடற்தகுதியை தக்க வைத்துக் கொள்ள முடிந்தால், 2027 ஒருநாள் உலகக்கோப்பையில்(ODI World Cup 2024) விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள். அவர்கள் இன்னும் உலகத் தரம் வாய்ந்த வீரர்களாக திகழ்கிறார்கள். எந்தவொரு அணியும் முடிந்தவரை இருவரையும் தக்கவைக்கவே விரும்புவார்கள். ஆனாலும், இது எனது தனிப்பட்ட முடிவுதான். என்னால் அவர்கள் எவ்வளவு காலம் கிரிக்கெட் ஆடுவார்கள் என்று சொல்ல முடியாது. அது வீரர்களின் தனிப்பட்ட முடிவுகளிலும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.