நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் குவிக்க திணறி வருவது அணியின் பேட்டிங் வரிசையில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அபிஷேக் சர்மா மீண்டும் தனது பழைய ஆட்டத்திற்குத் திரும்ப வேண்டியது அவசியமாகியுள்ளது.
கம்பீர் - அபிஷேக் சர்மா இடையிலான வைரல் உரையாடல்
அபிஷேக் சர்மாவின் மோசமான ஃபார்ம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரிடம் பேருந்தில் நீண்ட நேரம் உரையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த உரையாடலின் போது, உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட்டும் அவர்களுடன் இணைந்துகொண்டார். அடுத்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு அபிஷேக்கிற்கு உறுதியாக இருந்தாலும், அவரது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் பயிற்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பேருந்தில் அபிஷேக் சர்மா - கெளதம் கம்பீர் இடையே நடைபெற்ற நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தை என்னவென்று கிரிக்கெட் ஆர்வலர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உலகக் கோப்பைத் தொடரில் அபிஷேக்கின் தடுமாற்றம்
குரூப் சுற்றுப் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை 'டக் அவுட்' ஆகி ஏமாற்றம் அளித்த அபிஷேக் சர்மா, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் ஓரளவு மீண்டு வந்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த அவர், அதனை ஒரு பெரிய இன்னிங்ஸாக மாற்றும் முன்பே மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். உலக கோப்பை
சென்னையில் ஜிம்பாப்வேயுடன் மோதல்
சூப்பர் 8 சுற்றின் அடுத்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி சென்னையில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. சென்னை ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து, அதற்கேற்றவாறு அபிஷேக் சர்மா தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

🚨Gautam Gambhir having a serious discussion with Abhishek Sharma on the team bus after arriving in Chennai for the next match against Zimbabwe.
— Sonu (@Cricket_live247) February 23, 2026
Guess what they are discussing.👀 pic.twitter.com/dpGj1TTJM3
LIVE 24 X 7