விளையாட்டு

ஐபில் 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கிய அமெரிக்க நிறுவனம்!

ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்க நிறுவனம் ரூ.13,500 கோடிக்கு வாங்கியுள்ளது.

ஐபில் 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கிய அமெரிக்க நிறுவனம்!
Rajasthan Royals
19வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக 10 அணிகளும் தயாராகி வருகின்றன. வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க நடப்பு சாம்பியன் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளை விற்பனை செய்ய அதன் உரிமையாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்சிபி அணியை 19ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராஜஸ்தான் அணியை வாங்க ஆதித்யா பிர்லா குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தீவிர ஆர்வம் காட்டி வந்தது. ஆரம்பத்தில் தங்களது பெரும்பான்மையான பங்குகளை மட்டும் விற்கத் திட்டமிட்டிருந்த ராஜஸ்தான் அணி நிர்வாகம், சரியான விலை கிடைத்தால் அணியை முழுமையாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.13,500 கோடிக்கு அமெரிக்க நிறுவனம் வாங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய உரிமையாளர் அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி. வால்மார்ட், ஃபோர்டு நிறுவனங்களின் முக்கிய பங்குதாரர் இவர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கல் சோமானிக்கு மனோஜ் பதாலே விற்பனை செய்தார். ஏற்கனவே ராஜஸ்தான் அணியில் குறிப்பிட்ட பங்குகளை வைத்திருந்த சொமானி, அணியை மொத்தமாக வாங்கியுள்ளார்.