ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், இதில் பலப்பரீட்சை நடத்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 2026 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நாளை (மே 31) நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக மோதவுள்ளன. முன்னதாக நடைபெற்ற 'குவாலிஃபயர் 1' ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்திய பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.
முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் பெங்களூரிடம் தோல்வியடைந்த குஜராத் அணிக்கு இறுதிப்போட்டிக்குச் செல்ல இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான 'குவாலிஃபயர் 2' நாக்-அவுட் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இதன் மூலம் தங்களை வீழ்த்திய பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டியில் மீண்டும் மோதும் வாய்ப்பை குஜராத் பெற்றுள்ளது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் தற்போதைய தொடரில் மிகச்சிறந்த ஃபார்மில் இருப்பதால் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் கடுமையான சவால் காத்துக் கிடக்கிறது.

LIVE 24 X 7