விசிக அழைத்து அதிமுக சென்றால் நல்லது தான் - மா.சுப்பிரமணியன் அதிரடி

விசிக அழைத்து அதிமுக சென்றால் மது ஒழிப்பு கொள்கைக்கு எதிரான வகையில், அது நல்லதுதான் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Sep 10, 2024 - 14:50
Sep 11, 2024 - 09:49
 0
விசிக அழைத்து அதிமுக சென்றால் நல்லது தான் - மா.சுப்பிரமணியன் அதிரடி
விசிக அழைத்து அதிமுக சென்றால் நல்லது தான் - மா.சுப்பிரமணியன்

திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகின்ற 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இரு தொடர்பான ஏற்பாடுகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்த பின்னர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து தற்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்னும் பல தேர்தல்களுக்கு தற்போதுள்ள திமுக கூட்டணியை வலுப்படுத்தக் கூடியதாக, திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழா அமையும். இன்னும் பல தேர்தல்களுக்கு தற்போதுள்ள திமுக கூட்டணியை வலுப்படுத்தக் கூடியதாக இந்த விழா அமையும்” என்றார்..

மேலும், மது ஒழிப்பு மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுகவை அழைத்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியன், “விசிக அழைத்து அதிமுக சென்றால் மது ஒழிப்பு கொள்கைக்கு எதிரான வகையில் அது நல்லது தான். திமுக கூட்டணியில் எந்த வித பிசிறும் இல்லை. 2026 தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும்.

திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு  நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் முப்பெரும் விழா மற்றும் பவள விழா நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு நிகழ்வுகள் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்தப்பட்டு பெரும் வெற்றியை திமுகவிற்கு தேடித் தந்தது. 2026 தேர்தலில் 200 சட்டமன்ற இடங்களை பிடிக்க வேண்டும் என்கின்ற செயல் திட்டத்தின் அடிப்படையில் திமுக செயலாற்றிக் கொண்டிருக்கின்றது.

இதற்கு முன்பும் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை காட்டிலும் மிகப்பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது. 65 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு ஒரு லட்சம் பேர் பங்கேற்க கூடிய வகையில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. திமுக பவள விழாவை குறிக்கின்ற வகையில் 75 அடி கொடிக்கம்பத்தில் திமுக கொடி ஏற்றப்பட உள்ளது. நான்கு இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக, அக்டோபர் 2 ஆம் தேதி விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக திருமாவளவன் அறிவித்திருந்தார். மேலும், “விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம், எல்லாம் கட்சிகளும் வரலாம். இந்த நிலைப்பாடை தேர்தல் அரசியலோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

இதனால், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் கட்சிகள் இடம் மாறலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே, இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மின் கட்டண உயர்வு, போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை உள்ளிட்டவற்றில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow