வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம்.. நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. விடாது வெளுக்கும் மழை

Nilgiris Weather Update : நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழையும்; கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Jul 18, 2024 - 17:46
Jul 19, 2024 - 10:03
 0
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம்.. நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. விடாது வெளுக்கும் மழை
Nilgiris Weather Update

Nilgiris Weather Update : தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 20 செமீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 15 செமீ மழையும் மேல்பவானி, வால்பாறையில் 11 செமீ மழையும் சோலையார் பகுதியில் 10 செமீ மழையும் பதிவாகியுள்ளது. உதகையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக உதகை - எமரால்டடு செல்லும் சாலையின் குறுக்கே ஒரே இடத்தில் 5 மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மத்தியமேற்கு  மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (18.07.2024) மணியளவில் உருவாகியுள்ளது.  இது அடுத்த 2 – 3 தினங்களில் சற்று வலுப்பெற்று  ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக   தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழையும்;  கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

19.07.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்;  கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

20.09.2024 முதல் 24.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 -  28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 -  28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow