TN Weatherman : கோழிக்கோட்டில் 36 செமீ மழை.. வயநாட்டில் நிலச்சரிவு அரிய நிகழ்வு என்கிறார் வெதர்மேன்

Tamil Nadu Weatherman Post on Wayanad Landslide : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

Jul 30, 2024 - 12:57
Jul 30, 2024 - 13:10
 0
TN Weatherman : கோழிக்கோட்டில் 36 செமீ மழை.. வயநாட்டில் நிலச்சரிவு அரிய நிகழ்வு என்கிறார் வெதர்மேன்
Tamil Nadu Weather Man Update on Wayanad Landslide

Tamil Nadu Weatherman Post on Wayanad Landslide : கேரளாவில் பருவமழை தொடங்கியது முதல் பெய்த அதிதீவிர கனமழை என்றால் அது இதுதான் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.  இவ்வளவு பெரிய அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை  இது அரிய நிகழ்வு என்று குறிப்பிட்ட வெதர்மேன் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.கேரளாவில் சமவெளி மற்றும் மலைத்தொடர்களில் பெய்த கனமழையால் பல அணைகள் நிரம்பியுள்ளன.கக்காயம் அணை, கோழிக்கோடு மாவட்டத்தில் 363 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இந்த நிலச்சரிவு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

"கர்நாடகாவின் குடகு, ஹாசன், சிக்மகளூர், கேரளா, நீலகிரி, வால்பாறை, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை குறையும்.

இவ்வளவு பெரிய அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. கனமழை பெய்யும் என எதிர்பார்ப்பு இருந்தது உண்மை தான். ஆனால் எப்படியோ கேரளா, வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை மேகங்கள் தொடர்ந்து இருக்கின்றன. கேரளாவில் பருவமழை தொடங்கியது முதல் பெய்த அதிதீவிர கனமழை என்றால் அது இதுதான். வால்பாறை அணைகள் மற்றும் நீலகிரி அணைகளில் அதிக நீர்வரத்து உள்ளது. 

கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார். பொதுவாக பொதுவாக மழை வரும் போது கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மழை மேகங்கள் வலுவிழக்கும். அதன் பிறகு மற்றொரு மழை மேகங்கள் உருவாகும்.. ஆனால், இப்போது அப்படி இல்லை மழை மேகங்கள் வலுவிழக்கவில்லை. கனமழை தொடர்ந்து பெய்தே வந்துள்ளது. இது அரிய நிகழ்வு என்று குறிப்பிட்ட வெதர்மேன், நிலச்சரிவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.


கேரளாவில் சமவெளி மற்றும் மலைத்தொடர்களில் பெய்த கனமழையால் பல அணைகள் நிரம்பியுள்ளன.கக்காயம் அணை, கோழிக்கோடு மாவட்டத்தில் 363 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பதிஞ்சரதாரா அணை பகுதியில் 333 மி.மீ மழை பதிவாகியுள்ளது.கோழிக்கோடு, திருச்சூர், பாலக்காடு மல்லாபுரம், எரணாகுளம், இடுக்கி, பதன்மித்தா மாவட்டங்களில் 200 மிமீ மழை பெய்துள்ளதாக பதிவிட்டுள்ளார் வெதர்மேன் பிரதீப்ஜான்.

வயநாட்டில் கடந்த ஒரு மாத காலமாகவே மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வானிலை மையமும் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் வெளியிட்டவாறே இருந்தது.தொடர்மழையால் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow