கன்னியாகுமரியில் கள்ளக்கடல்.. கடல் சீற்றம் மீனவர்களுக்கு வார்னிங் கொடுத்த கலெக்டர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் வரும் 11 ம் தேதி வரை கடல் சீற்றம் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. ஆட்சியரின் அறிவிப்பை தொடர்ந்து லெமூர் கடற்கரை மூடப்பட்டது

Aug 8, 2024 - 14:02
 0
கன்னியாகுமரியில் கள்ளக்கடல்.. கடல் சீற்றம் மீனவர்களுக்கு வார்னிங் கொடுத்த கலெக்டர்
Kanniyakumari Collector warns fishermen of high sea waves

தமிழகத்தில் தென்மாவட்ட கடற்கரைகளுக்கு கள்ளக் கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக கடல் சீற்றம் என்பது புயலோ, காற்றழுத்த தாழ்வு நிலையோ, கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தின் போதும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இது போன்ற எந்த நிகழ்வுகளும் இல்லாமல் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றம் என்பது கள்ளக்கடல் என அழைக்கப்படுகிறது.

தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று (08.08.2024) மன்னார்   வளைகுடா,  தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய  குமரிக்கடல்ப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளைய தினம் 09.08.2024 முதல் 12.08.2024 வரை மன்னார்   வளைகுடா,  தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய  குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் இன்று ( ஆகஸ்ட் 8) மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு அதனை ஒட்டிய வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்,   தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள்,   வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள்,  தென்மேற்கு அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

11.08.2024 மற்றும் 12.08.2024 ஆம் தேதிகளில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் ( ஆகஸ்ட் 8)வரும் 12.08.2024 வரை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் வரும் 11 ம் தேதி வரை கடல் சீற்றம் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆட்சியரின் அறிவிப்பை தொடர்ந்து லெமூர் கடற்கரை மூடப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 ஆம் தேதி வரை விடப்பட்ட எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் 8 முதல் 11 ஆம் தேதி வரை அனைத்து கடற்கரைகளிலும் இயல்பை விட கடற்சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும் காற்றின் அளவு 35 கி.மீ முதல் 55 கி.மீ வரையிலும் சில நேரங்களில் மணிக்கு 65 கி.மீ. வரை வேகம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வருவதால் ஏற்கனவே விடப்பட்ட எச்சரிக்கையானது 8 முதல் 11 வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே மீனவர்களும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், தங்களது படகுகளை பாதுகாப்பாக கரைகளில் கட்டிவைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சுற்றுலா பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கும் மற்றும் கடலில் குளிக்கவும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து லெமூர் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இன்று தடை விதிக்கப்பட்டதுடன் அங்கு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow