நெல்லை மாநகர பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் இரண்டு பேர் சம்பவத்தன்று இரவு, சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியின் செல்போனுக்கு கால் செய்துள்ளனர். அப்போது, அந்த கல்லூரி மாணவியிடம், 2 ஆசிரியர்களும் விரும்பத்தகாத வகையில் பேசியதோடு மது குடிப்பதற்கும் அழைத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, நடந்த சம்பவங்கள் குறித்து தனது பெற்றோரிடம் எடுத்துரைத்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த பெற்றோர் பாளை போலீசில் புகார் அளித்தனர். மறுநாள் அந்த புகார் தொடர்பான விசாரணையை, போலீசார் தொடங்குவதற்குள் திரும்ப பெற்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தால், எனது மகளின் படிப்பு பாதிக்கப்பட்டுவிடும். எனவே மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து வேறு வழியில்லாமல் அந்த புகார் மனுவை போலீசார் கிடப்பில் போட்டுவிட்டனர்.
மேலும், பேராசியர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர். இதனை, எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்ட போலீஸார் அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாணவியிடம் செல்போனில் பேராசிரியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படும் புகாரை, அவரது பெற்றோர்கள் திரும்ப பெற்று கொண்டு விட்டனர். யாராவது புகார் அளித்தால் தானே நாங்கள் விசாரிக்க முடியும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், பள்ளி மாணவர்களின் புத்தக்கப் பையில், அரிவாள் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நெல்லை மாநகரத்தின் புறநகர் பகுதியான தாழையுத்து பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் இருவர், பையில் அறிவால் இருப்பதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து ஆசிரியர்கள் தாழைத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து, பள்ளிக்கு விரைந்து வந்த காவலர்கள் மாணவர்களின் கைகளில் சோதனை செய்தனர். அப்போது மாணவன் ஒருவனின் பையில் அரிவாள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மாணவர்கள் இருவரையும் போலீசார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.