சினிமா வசனத்தை கூறி அமைச்சர் உதயநிதியை மேடையிலேயே புகழ்ந்த வீராங்கனை!.

Bhavani Devi Praised Udhayanidhi Stalin : விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதியின் சினிமா வசனத்தை வீராங்கனை பவானி தேவி கூறிய சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியது.

Jul 30, 2024 - 13:10
Jul 30, 2024 - 13:31
 0
சினிமா வசனத்தை கூறி அமைச்சர் உதயநிதியை மேடையிலேயே புகழ்ந்த வீராங்கனை!.
வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Bhavani Devi Praised Udhayanidhi Stalin : தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் ஆசிய விளையாட்டு போட்டி ஆகியவற்றில் சாதனை படைத்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “நம்முடைய தமிழ்நாடு பஞ்சாப் அரியானா மாநிலத்துக்கு அடுத்து அதிக வீராங்கனை அனுப்பி உள்ள மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் இருந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 16 பேர் பங்கேற்றுள்ளனர். விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக தலா ஒரு லட்சம் வீதம் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உங்களை சுற்றி இருப்பவர்கள் எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் , நீங்கள் முனைப்போடு வெல்ல வேண்டும். எதற்கு தமிழ்நாடு ஒலிம்பிக் போட்டியில் இங்கு உள்ளவர்களின் பெயர் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கை எனக்கும் உங்களுக்கும் உள்ளது. பல்வேறு சமூக தடைகளைத் தாண்டி பெண் வீராங்கனைகள் இங்கு வந்துள்ளீர்கள். சிறப்பாக விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் சாம்பியன்ஷிப் அறக்கட்டளை தொடங்கப்பட்டது” என்றார்

வாள் வீச்சு வீராங்கனை பேசுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்தின் வசனத்தை சொல்லி புகழ்ந்தார். அப்போது பேசிய அவர், "ஃபர்ஸ்ட் வர்றவங்கள ஊக்குவிக்கிறத விட லாஸ்ட் வர்வங்கள ஊக்குவிக்கணும்" என்று படத்தில் வரும் வசனம் போல வெற்றி பெறுபவர்களை மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழக அரசு அனைத்து வித உதவிகளையும் செய்து வருகின்றது

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நான் தகுதி பெறவில்லை. இருப்பினும்  அதற்காக எடுத்த பயிற்சியும், அதற்கான முயற்சியும் எனக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது. என்னுடைய வளர்ச்சிக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரிதும் உதவி இருக்கின்றது அதை என்றும் மறக்க முடியாது.

விளையாட்டில் தமிழகத்தை இந்தியாவின் தலைநகராக மாற்றும் முயற்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார் அவருக்கு விளையாட்டு வீரர்கள் நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டே அவரின் சினிமா வசனத்தை கூறியதால் கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு, சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வாள் வீச்சு போட்டியில் வீராங்கனை பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வாள்வீச்சு விளையாட்டில் பதக்கம் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பவானி தேவி பெற்றது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow