கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரிப்பதை பார்த்தால் ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளனர்.
தங்கம் விலை நிலவரம்
ஓரளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை மார்ச் 25-ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அதன்படி, மார்ச் 25-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 65 ஆயிரத்து 480 ரூபாயாக இருந்த நிலையில் 28-ஆம் தேதி 66 ஆயிரம் ரூபாயை எட்டி நகைப்பிரியர்கள் தலையில் பேரிடியாய் விழுந்தது. தொடர்ந்து, ஏப்ரல் 1-ஆம் தேதி ஒரு சவரன் 68 ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது.
ஏப்ரல் 2 மற்றும் 3-ஆம் தேதி தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லாததால் நகைப்பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக நேற்று மீண்டும் விலை உயர்ந்து ஒரு கிராம் 8 ஆயிரத்து 510 ரூபாய்க்கும், ஒரு சவரன் 68 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு 50 ரூபாயும் சவரனுக்கு 400 ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் 8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் 68 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
தங்கம் விலை குறைவு
இனிமேல் தங்கத்தை கனவில் தான் வாங்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராமிற்கு 180 ரூபாய் குறைந்து 8,400-க்கும் ஒரு சவரனுக்கு 1,280 குறைந்து 67 ஆயிரத்து 200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு
அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி அண்ணாச்சி
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.