Vande Bharat Ticket Price : சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியா? வந்தே பாரத் ரயில்.. டிக்கெட் விலை குறையுமா?

Chennai To Nagarcoil Vande Bharat Ticket Price : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ள சென்னை எழும்பூர் - நாகர்கோயில், மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில்களின் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக பயணிகள் கூறியுள்ளனர்.

Aug 31, 2024 - 10:09
Aug 31, 2024 - 17:42
 0
Vande Bharat Ticket Price : சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியா? வந்தே பாரத் ரயில்..  டிக்கெட் விலை குறையுமா?
chennai nagercoil vande bharat express

Chennai To Nagarcoil Vande Bharat Ticket Price : இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து சேவைத்துறையாக ரயில்வே துறை விளங்குகிறது. இதனால், மத்திய அரசு ரயில்வே துறையில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு புதிய ரயில்களை இயக்கி வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசால் அதிவேகமாகவும், நவீன வசதிகளுடனும் தொடங்கப்பட்டது வந்தே பாரத் ரயில்.
சாதாரண ரயில்களின் கட்டணங்களை விட பல மடங்கு அதிகமாக இருப்பதாக பயணிகள் கருத்து கூறியுள்ளனர். அதிக அளவில் சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் வந்தே பாரத் ரயில் மூலமாக இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில், இன்று பிரதமர் மோடி 3 புதிய வந்தே பாரத் ரயில்களை தொடக்கி வைக்கிறார். இதில்  2 ரயில்கள் தமிழ்நாட்டிற்கு கிடைக்கிறது. 

கட்டணம்:

இன்று புதியதாக தொடங்க உள்ள சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையேயான வந்தே பாரத் ரயிலின் கட்டண விபரம்:

எழும்பூர்  - தாம்பரம்      :  ரூ.380 , ரூ.705 (எக்ஸிக்யூட்டிவ்)    
எழும்பூர் – விழுப்புரம்    : ரூ. 545, ரூ.1055  (எக்ஸிக்யூட்டிவ்)       
எழும்பூர் – திருச்சி           :  ரூ.955,  ரூ.1790   (எக்ஸிக்யூட்டிவ்)     
எழும்பூர் -  திண்டுக்கல் : ரூ.1105, ரூ. 2110   (எக்ஸிக்யூட்டிவ்)    
எழும்பூர் – மதுரை           : ரூ.1200, ரூ. 2,295   (எக்ஸிக்யூட்டிவ்)    
எழும்பூர் – கோவில்பட்டி:ரூ.1350, ரூ.2,620     (எக்ஸிக்யூட்டிவ்)   
எழும்பூர் – நெல்லை       : ரூ.1,665, ரூ.3,055    (எக்ஸிக்யூட்டிவ்)   
எழும்பூர் – நாகர்கோயில் : ரூ. 1760, ரூ.3240 (எக்ஸிக்யூட்டிவ்)   

----------

நாகர்கோயில் – நெல்லை         : ரூ.440, ரூ. 830  (எக்ஸிக்யூட்டிவ்)   
நாகர்கோயில் – கோவில்பட்டி : ரூ.515,  ரூ.985   (எக்ஸிக்யூட்டிவ்)   
நாகர்கோயில் – மதுரை             : ரூ.735,   ரூ.1405   (எக்ஸிக்யூட்டிவ்)   
நாகர்கோயில் – திண்டுக்கல்   : ரூ.850,    ரூ.1635   (எக்ஸிக்யூட்டிவ்)    
நாகர்கோயில் – திருச்சி            : ரூ.1000, ரூ.1945    (எக்ஸிக்யூட்டிவ்)   
நாகர்கோயில்  - விழுப்புரம்     : ரூ.1510, ரூ.2775    (எக்ஸிக்யூட்டிவ்)   
நாகர்கோயில் – தாம்பரம்        : ரூ.1700, ரூ.3175    (எக்ஸிக்யூட்டிவ்)   
நாகர்கோயில் – எழும்பூர்         : ரூ.1735, ரூ.3220    (எக்ஸிக்யூட்டிவ்)   


மதுரை - பெங்களூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டண விபரங்கள்:

 சாதாரண இருக்கைகள் கட்டணங்கள்:

மதுரை - பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி சாதாரண இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூபாய் 440, திருச்சிக்கு ரூபாய் 555, கரூருக்கு ரூபாய் 795, நாமக்கல்லிற்கு ரூபாய் 845, சேலத்திற்கு ரூபாய் 935, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூபாய் 1555, பெங்களூரு கண்டோன் மெண்ட்டிற்கு  ரூபாய் 1575 கட்டணமாக வசூலிக்கப்படும்.

மதுரை - பெங்களூர்  உயர் வகுப்பு இருக்கைகள் கட்டண விபரம்:

அதே போல் மதுரை - பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி உயர் வகுப்பு இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூபாய் 825, திருச்சிக்கு ரூபாய் 1075, கரூருக்கு ரூபாய் 1480, நாமக்கல்லிற்கு ரூபாய் 1575, சேலத்திற்கு ரூபாய் 1760, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூபாய் 2835, பெங்களூரு கண்டோன் மெண்ட்டிற்கு  ரூபாய் 2865 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு:

சாதா ரயில்களின் கட்டணத்தை காட்டிலும் இந்த கட்டணம் பன்மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை எழும்பூர் - நாகர்கோயில், மதுரை – பெங்களூர் ரயில்கள் தமிழக பயணிகளுக்கு வசதியாக அமைந்துள்ளது. வந்தே பாரத் ரயில் மற்ற ரயில்களை காட்டிலும் அதிவேகமாக சென்றாலும், நவீனமாக இருந்தாலும் அதன் கட்டணம் சாமானியர்களும் பயணிக்கும் வகையில் அமையாதது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவே அமைகிறது. 

ரயில் கட்டணங்கள் குறையுமா?:

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வந்தே பாரத் சாதாரண் ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. வந்தே பாரத் சாதாரண் ரயில் என்பது சாதாரண மக்கள் பயணிக்கும் வந்தே பாரத் ரயில் என்பதை குறிப்பது ஆகும். இதில் ஏசி இல்லாத 8 கோச்சுகள் கொண்ட சேவை தொடங்கப்பட உள்ளது. 12 மூன்றாம் தர ஏசி கோச்சுகளும், 2 முதல் தர ஏசிகளும் கொண்ட 22 பெட்டி ரயில் ஆகும். தற்போது இருக்கும் வந்தே பாரத் ரயிலில் உள்ளது போன்ற அதே வசதிகள் இதிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow