Today Rasi Palan: இன்றைய ராசிபலன் - ஆடிப்பெருக்கு நாளில் அதிர்ஷ்ட மழை யாருக்கு?

Today Rasi Palangal 2024 : சனிக்கிழமையான இன்றைய தினம் கடக ராசியில் பயணம் செய்யும் சந்திரனால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Aug 3, 2024 - 05:00
Aug 3, 2024 - 12:06
 0
Today Rasi Palan: இன்றைய ராசிபலன் - ஆடிப்பெருக்கு நாளில் அதிர்ஷ்ட மழை யாருக்கு?
Today Rasi Palangal 2024

Today Rasi Palangal 2024 : நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆடி மாதம் 18ஆம் நாள் ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை
சதுர்த்தசி திதி பிற்பகல் 03.51 மணி வரை அதன் பிறகு அமாவாசை திதி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 11.56 மணி வரை அதன் பிறகு சம் நட்சத்திரம். ஆடிப்பெருக்கு தினமான இன்று சந்திரனின் பயணத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் யாருக்கு சந்திராஷ்டமம் என்று பார்க்கலாம்.

மேஷம்:

சுக ஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து சந்திரன் பயணம் செய்கிறார். சந்திரன் சஞ்சாரத்தினால் இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பேச்சை கேட்டு நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறப்புகளால் நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி தேடி வரும்.  இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள்.

மிதுனம்

சந்திரன் சாதகமாக இருக்கிறார். இன்று நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி பேச்சில் கவனம். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.

கடகம்

சந்திரன் உங்களுக்கு சந்தோஷத்தை தரப்போகிறார்.  இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்பு உருவாகும். வேலையில் உங்கள் உழைப்பிற்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.  உறவினர்களிடையே சுமூக உறவு ஏற்படும்.

சிம்மம்

சந்திரன் உங்களுக்கு விரைய ஸ்தானத்தில் இருப்பதால் இன்று பணவரவு சுமாராக இருக்கும். சுப விரைய செலவுகள் ஏற்படும். மாலைக்கு மேல் குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் உங்களுக்கு புது தெம்பை தரும். உங்க ஆரோக்கியம் நன்றாக இருக்கும்

கன்னி

சந்திரன் உங்களுக்கு லாபத்தை தரப்போகிறார். வேலையில் உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.  வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வங்கியில் சேமிப்பு உயரும்.

துலாம்

சந்திரன் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை கொடுப்பார். இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

விருச்சிகம்

சந்திரன் உங்களின் மனதில் மலர்ச்சியை ஏற்படுத்துவார். இன்று வேலை விசயமாக பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் கவனமாக இருங்க.  உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வேண்டாம்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு  உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிடைக்கும்.

தனுசு

சந்திரனால் உங்களுக்கு சாதகமில்லை. உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்பு ஏற்படும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். புதிய முதலீடுகள் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வீட்டில்  வாக்குவாதங்களை தவிர்க்கவும். சந்திராஷ்டமம் உள்ளதால் மன அமைதி அனைவருக்கும் நல்லது மவுன விரதம் இருக்கவும்.

மகரம்

சந்திரானால் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும்ழழாழழ வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். மாலைக்கு மேல் சந்திராஷ்டமம் வருவதால் கவனமாக இருக்கவும்.

கும்பம்

சந்திரன் உங்களுக்கு நிறைய சந்தோஷத்தை கொடுப்பார். இன்று உங்களுக்கு இருக்கும் மனக்குழப்பங்கள் விலகி நிம்மதி ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுடன் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். சுபகாரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

சந்திரன் சில நேரங்களில் சாதகமாகவும் பாதகமாகவும் சஞ்சரிக்கிறார். வேலை செய்யும் இடத்தில்  எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow