Actor Ajith Kumar Celebrats 32 Years in Tamil Cinema : கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் குமாருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரசிகர் மன்றங்களே இல்லாமல் ஒரு ஹீரோவை இந்தளவுக்கு ரசிகர்கள் கொண்டாடி வருவது என்றால், அது அஜித்தாக மட்டுமே இருக்க முடியும். நடிகராக மட்டுமில்லாமல் பைக், கார் ரேஸிங், துப்பாக்கிச் சுடுதல், ட்ரோன் மேக்கிங், பிரியாணி ஸ்பெஷலிஸ்ட் என வேற லெவலில் மாஸ் காட்டி வருகிறார். தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் பிஸியாக இருக்கும் அஜித், அடுத்து பிரசாந்த் நீல் இயக்கும் ஏகே 64 படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அஜித் சினிமாவில் அறிமுகமாகி 32 ஆண்டுகளை கடந்துவிட்டார். தெலுங்கில் பிரேம புஸ்தகம், தமிழில் அமரவாதி என ஒரே ஆண்டில் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அஜித், யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் தனியாக கெத்து காட்டி வருகிறார். எந்தவித குடும்ப பின்னணியும் இல்லாமல், இத்தனை ஆண்டுகள் சினிமாவில் ஹீரோவாக தாக்குப் பிடிப்பது அவ்வளவு சாதாரணமானது இல்லை. இப்படியாக அஜித்தின் புகழ்பாடி அவரது ரசிகர்கள் அடிக்கடி ஃபயர் விடும் சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அதேபோல், 32 இயர்ஸ் ஆஃப் அஜித் என்ற ஹேஷ்டேக் கடந்த சில தினங்களாக டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அஜித்துக்காக ரசிகர் மன்றங்கள் இல்லையென்றாலும், அஜித்தின் 32 ஆண்டு திரைப்பயண சாதனையை கொண்டாட வேண்டும் என அவரது ஃபேன்ஸ் முடிவு செய்துள்ளனர். முக்கியமாக இந்த கொண்டாட்டத்தில் விடாமுயற்சி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷனும், குட் பேட் அக்லி படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸும் இணையவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது நாளை (ஆக 3) நடைபெறவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் அஜித் ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அதோடு விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி பற்றி ஏதேனும் அப்டேட் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடைபெற்றது. விடாமுயற்சி படத்தில் இருந்து இதுவரை அஜித், த்ரிஷா, அர்ஜுன் ஆகியோரின் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் போன்ற அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த சிக்னலும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க - மகாராஜா இயக்குநர் நித்திலனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
அதேபோல், குட் பேட் அக்லி படத்தில் நடித்து வரும் அஜித், அடுத்து பிரசாந்த் நீல் கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங்கில் உள்ளனர். ஒருவேளை இக்கூட்டணி உறுதியானால், கோலிவுட்டின் மெகா இண்டஸ்ட்ரியல் ஹிட் லிஸ்ட்டில் ஏகே 64 தான் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.