Today Rasi Palan: இன்றைய ராசிபலன் இந்த 4 ராசிக்காரர்கள் கவனம் வாயை திறக்காதீர்கள்

Today Rasi Palan 2024 in Tamil : ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் மிதுன ராசியில் இன்று பயணம் செய்யும் சந்திரனால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Aug 2, 2024 - 06:47
Aug 3, 2024 - 10:12
 0
Today Rasi Palan: இன்றைய ராசிபலன்  இந்த 4 ராசிக்காரர்கள் கவனம் வாயை திறக்காதீர்கள்
Today Rasi Palan 2024 in Tamil

Today Rasi Palan 2024 in Tamil : நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆடி மாதம் 17ஆம் நாள் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை
திரயோதசி திதி பிற்பகல் 03.27 மணி வரை அதன் பிறகு சதுர்தசி திதி. திருவாதிரை நட்சத்திரம் காலை 10.59 மணி வரை அதன் பிறகு புனர்பூசம் நட்சத்திரம். சந்திரனின் பயணத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் யாருக்கு சந்திராஷ்டமம் என்று பார்க்கலாம்.

மேஷம்

தொழில் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சனைகளில் சுமூகமான முடிவு காண்பீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்து தலை நிமிர்ந்து நிற்பீர்கள். மனதிற்குப் பிடித்தவர்களின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்

அலுவலக பிரச்சினையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வெளியூர் பயணங்களில் விரும்பத்தகாத செயல்களை எதிர்கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவைப்படும். 

மிதுனம்

நினைத்த காரியத்தை  நிறைவேற்றுவீர்கள். உங்கள் வாக்கு வன்மையால் வியாபாரத்தில் வருமானத்தைப் பெருக்குவீர்கள். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

கடகம்

வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தொழில்துறை போட்டிகளை தகர்த்து எறிவீர்கள். சில நேரங்களில் மற்றவர் பேச்சுகளை தவறாக புரிந்து கொள்வீர்கள். கவனமும் நிதானமும் தேவைப்படும். 

சிம்மம்

அலுவலகத்தில் போட்டி அதிகரிக்கும் திடீர் பணி மாறுதல் செய்யப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் மிகுந்த அல்லல்படுவீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சியில் இறங்கி வெற்றி கொடி நாட்டுவீர்கள். வாழ்க்கை துணையின் மன வருத்தத்தை போக்குவீர்கள். பழைய கடன்களை பக்குவமாக வசூல் செய்வீர்கள்.

கன்னி

ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். கலைஞர்கள் தங்குதடையின்றி புதிய வாய்ப்பைப் பெறுவீர்கள்.  நீங்கள் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வை பெறுவீர்கள். கடுமையான நோய் தாக்கத்திலிருந்து விடுபடுவீர்கள்

துலாம்

பண வருமானம் அதிகரிக்கும்.   உயரதிகாரிகள் மூலம் உத்தியோகத்தில்  உதவிகள் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மூலம் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

விருச்சிகம்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்றாலும் அஷ்டமத்து சந்திரனால் மனக்குழப்பம் நீடிக்கும். வியாபாரக் கடன்களை வசூலிப்பதில் சிரமப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் கலக்கமடைவீர்கள். கணவன்-மனைவி இருவரும் பழைய விஷயங்களைக் கிளறி அமைதியை கெடுப்பீர்கள் . சந்திராஷ்டமம் என்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.


தனுசு

பண விசயங்களில் இன்று கவனம் தேவை.  அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள்.   வாடிக்கையாளர்களிடம் வாக்கு சாதுரியமாகப் பேசாவிட்டால் நஷ்டம் அடைவீர்கள். அலட்சியமாக வேலை செய்தால் ஆபத்தில் சிக்குவீர்கள். 
வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை.

மகரம்

ஆன்மீகப் பணியில் அதிக நாட்டம் கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை தாண்டி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள்.  குடும்ப உறவுகளை ஒற்றுமை அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள்.

கும்பம்

உண்மையாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பீர்கள். தொழில் தொடர்பான இழுபறி நிலைகளை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பண வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வேலையில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டினை பெறுவீர்கள். குல தெய்வ கோவிலுக்கு சென்று வரலாம்.

மீனம்

சுகமான நாளாக அமையப்போகிறது. அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். அரசாங்க உதவிகளை சுலபமாக பெறுவீர்கள். பெண்கள் துணிச்சலுடன் செயலாற்றி காரியசித்தி அடைவீர்கள். விருப்பமானவர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். தர்மசிந்தனை அதிகரித்து பிறருக்கு உதவி செய்வீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow